மேலும் அறிய

Mayiladuthurai: நகராட்சியை கண்டித்து நகரமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் போர் கொடி - சீர்காழியில் பரபரப்பு

சீர்காழியில் நகராட்சியை கண்டித்து நகரமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் அதன் தலைவர் துர்காபரமேஸ்வரி (திமுக) தலைமையில் நேற்று மாலை  நடைபெற்றது. ஆணையர் வாசுதேவன்  முன்னிலை வகித்தார்.இதில் தலைவர்,துணை தலைவர் உள்ளிட்ட 24 உறுப்பினர்களும் பங்கேற்றனர். 25 மன்ற பொருள் தீர்மானங்களை நிறைவேற்றிட கூட்டத்தில்  தீர்மானங்களை வாசிக்கப்பட்ட நிலையில், திமுக, தேமுதிக, மதிமுக, அதிமுக மற்றும் பாமக, சுயேச்சை உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பனர்கள் கடந்த 1ஆண்டாக உறுப்பினர்கள்  கூட்டத்தில் வைத்த எந்த கோரிக்கையும் நிறைவேற்றவில்லை, டென்டர் விடப்பட்ட பணிகள் ஏதும் செய்துமுடிக்கவில்லை, நகரில் குப்பைகள் அள்ளப்படாமல் கடந்த 3 மாதத்திற்கு மேலாக மலைப்போல் குவிந்துகிடக்கிறது என பல்வேறு குற்றம்சாட்டியும், அதனை சரிசெய்துவிட்டு கூட்டம் நடத்தவேண்டும் என கோரினர். 

Mayiladuthurai: நகராட்சியை கண்டித்து நகரமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் போர் கொடி - சீர்காழியில் பரபரப்பு

ஆனால், தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டதால், ஆத்திமடைந்த உறுப்பினர் ஒருவர் தீர்மான நகலை கிழித்து எரிந்தார். அதன்பின்னர் 12 நகர்மன்ற உறுப்பினர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  அதன்பின்னர் மன்ற பொருள் வாசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சி கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற கூட்டம் மற்றும் தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும் எனவும், ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் எனக்கூறி தொடர்ந்து இரவு முழுவதும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்திலேயே உணவு அருந்திவிட்டு பின்னர், பாய், தலையணையை எடுத்து வரப்பட்டு நகர மன்ற உறுப்பின்கள் கூட்ட அரங்கில் படுத்து உறங்கினர். 

CM MK Stalin Birthday : "நீண்ட ஆயுள்.. ஆரோக்கியத்துடன் வாழ்க” ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

Mayiladuthurai: நகராட்சியை கண்டித்து நகரமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் போர் கொடி - சீர்காழியில் பரபரப்பு

தற்போது  16 மணி நேரத்தை கடந்தும் 12 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வராமல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  10 -ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சூரிய பிரபா தனது 4 - மாத கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். குழந்தையும்  அங்கேயே  கொசுக்கடியில் உறங்க வைத்து உறுப்பினர் சூரிய பிரபா கண் விழித்து போராட்டத்தை தொடர்ந்தார். முன்னதாக சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நகர மன்ற உறுப்பினர்களிடம்  இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால்  நடைபெற்ற கூட்டம்  ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என 12 நகர மன்ற உறுப்பினர்களும் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  

Mayiladuthurai: நகராட்சியை கண்டித்து நகரமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் போர் கொடி - சீர்காழியில் பரபரப்பு

இந்நிலையில் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் கடந்த ஒரு ஆண்டுகாலமாக சாலை வசதி, குடிநீர் மற்றும் குப்பைகள் அல்லாத அவல நிலை தொடர்வதால் நகராட்சி தலைவரையும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 24 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக நகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து போராட்டம் தொடர்ந்து வருகிறது, பதற்றமான சூழல் நிலவுவதால் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Thirumavalavan MP : பாஜக, பாமக வந்தால் நாங்கள் இருக்க மாட்டோம்.. தொல்.திருமாவளவன் எம்.பி., திட்டவட்டம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Embed widget