மேலும் அறிய

Black Flag Protest: மீண்டும் மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநருக்கு கருப்பு கொடி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வந்த தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டி  கண்டன முழக்கமிட்டனர்.

சீர்காழி, சட்டைநாதர்  கோவிலின் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில், யாகசாலை பூஜைகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காண்பித்தும் கண்டன முழக்கமிட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.

Black Flag Protest: மீண்டும் மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநருக்கு கருப்பு கொடி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை மே 24 -ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சட்டைநாதர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில், இருபதாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 24 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

Black Flag Protest: மீண்டும் மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநருக்கு கருப்பு கொடி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16 -ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து  உப்பனாற்றில் இருந்து குதிரை, ஓட்டங்கள் உள்ளிட்ட மங்கள சின்னங்கள் முன்னே செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்கு நான்கு யானைகள் மீது கடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து  மாலை மேற்கு கோபுர வாசல் அருகே 82 யாக குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. பின்னர் 8 மணிக்கு மேல்  முதல் கால யாகசாலை பூஜைகளளுடன் தொடங்கி பூஜைகள் நடைபெற்று வருகின்றனர்.  இந்நிலையில் இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் சார்பில் பல்வேறு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், ஆளுநர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Black Flag Protest: மீண்டும் மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநருக்கு கருப்பு கொடி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எட்டு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை ஏழாம் காலை யாகசாலை பூஜைகள் நடைபெற இருந்தது அதற்கு முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் 500 - க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இந்த சூழலில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 3.50 மணி அளவில் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்த போது, சிதம்பரம் - மயிலாடுதுறை பிரதான சாலையில் அரசூர் என்ற பகுதியில் ஆளுநர் ரவி அவர்களின் காரை வழிமறிக்க முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்பு கொடி காண்பித்தும், கண்டன முழக்கங்களிட்டும் எதிர்ப்பை காட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Black Flag Protest: மீண்டும் மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆளுநருக்கு கருப்பு கொடி - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

தொடர்ந்து ஆளுநர் திரும்பி செல்ல வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட துணை செயலாளர் குமரேசன், மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜய், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், சீர்காழி ஒன்றிய செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் ஆகியோரை  அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். கடந்த முறை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் ஆதீனத்திற்கு வந்தபோது பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி அவர் கார் மீது கல்லெறிந்ததும், தற்போதும் தர்மபுரம் ஆதீனத்தை சந்தித்து தர்மபுரர் தினத்திற்கு சொந்தமான கோவில் கும்பாபிஷ விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டியது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget