மயிலாடுதுறையில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் உருண்டு, புரண்டு பாஜக ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் சேரும் சகதியுமான சாலையை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரைநிர்வாணத்துடன் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் உருண்டு, புரண்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியின் 31வது வார்டு அறுபத்திமூவர்பேட்டை பகுதியில் பெரியகுளம் மேலத்தெரு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் தெருவில் உள்ள 500 மீட்டர் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்நிலையில் இந்த பகுதியின் அருகே பெரியகுளம் சீர் செய்யும் பணி நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதால் அந்த சாலை படுமோசமாக மாறி உள்ளது.
Director Mohan G: ‛அஜித் பற்றி நான் பேசினால் தவறாகிவிடும்’ மோகன் ஜி பளிச் பதில்!
மேலும், தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் மழை நீர் தேங்கி பள்ளங்கள் இருப்பது கூட தெரியாமல் குளம்போல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றசாட்டும் பொதுமக்கள். இன்று தங்கள் பொறுமையை இழந்து ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர், பாஜக நகர தலைவர் வினோத் தலைமையில் குண்டு குழியுமான சாலையில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
BECIL Job : 22 ஆயிரம் வரை மாத ஊதியம்; மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; விவரத்திற்கு இதைப் படிங்க!
ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக நகர பொது செயலாளர் சுந்தரமுருகன் என்பவர் சாலையில் தேங்கி இருக்கும் மழை நீரில் சட்டை அணியாமல் அரைநிர்வாணமாக சாலையில் முட்டி போட்டும், படுத்து உருண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி அவர்களிடம் இது குறித்து தொடர்பு கொண்டு கேட்டதற்கு, தான் புதிய ஆணையாராக பதவியேற்று நான்கு மாதம் தான் ஆகிறது. நான் பதவி ஏற்ற பிறகு எந்த புகார் மனுவும் வரவில்லை எனவும் இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மயிலாடுதுறையை பூர்விகமாக கொண்ட எம்.கே.டி.பாகவதர் நினைவு நாளை முன்னிட்டு நாட்டுப்புற கலைஞர்கள் வித்தியாசமான இசை அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் M.K.T.பாகவதர் எனப்படும் மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதரின் 63 -ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று மயிலாடுதுறையில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பாகவதரின் பிறந்த ஊரான மயிலாடுதுறையில் கலைத்தாய் அறக்கட்டளை சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் இணைந்து அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது பாடல்களை இசைக்கருவிகளுடன் இசைத்து பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
Bigg Boss Season 6: சர்ச்சையில் பிக் பாஸ் 6... தொகுத்து வழங்கும் நடிகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!