மயிலாடுதுறை அருகே டிரைவரை அடித்துக் கொலை - சிறுவன் உட்பட 3 பேர் கைது
மயிலாடுதுறை அருகே டிரைவரை அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கூட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் என்பவரின் மகன் 24 வயதான திருவேங்கடநாதன். டிரைவரான இவரும், அதேப் பகுதியைச் சேர்ந்த கண்ணையன் என்பவரின் 26 வயது மகன் கலியபெருமாள் என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் கலியபெருமாள் சகோதரியின் கணவர் சமீபத்தில் விபத்தில் உயிரிழந்துள்ளார். கணவர் குடும்பத்தில் இருந்து சகோதரிக்கு கிடைக்க வேண்டிய பங்கை கலியபெருமாள் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு திருவேங்கடநாதன் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 5ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கலியபெருமாள், அருண் ஆகாஷ் மற்றும் ராதாநல்லூரைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகிய மூவரும் சேர்ந்து கட்டையால் தாக்கியதால் படுகாயம் அடைந்த திருவேங்கடநாதன் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி திருவேங்கடநாதன் உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் செம்பனார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாள், அருண், ஆகாஷ் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் 108 முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் நடனம் ஆடி, சீர்காழிக்கு பெருமை சேர்த்த மாணவி சுபானுக்கு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய அரசு சார்பில் காசியில் தமிழ் சங்கமம் விழா கடந்த நவம்பர் 16 -ஆம் தேதி தொடங்கி ஒரு மாத காலம் நடைபெற்றது, தமிழ் சங்கத்தில் தமிழ் இலக்கியம், கல்வி கலாச்சாரம், காசி மற்றும் தமிழ் கலாச்சாரமும், தென்னிந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் உணவு, கைத்தறி விவசாயம், நாட்டுப்புற கலை ஆகியவற்றை காட்டும் 75 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. காசி மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பழமையான தொடர்பை காட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக தமிழகத்தில் இருந்து 2500 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த யோகா மாணவி சுபானு கலந்து கொண்டு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் 108 முத்திரைகளை காட்டி சிவதாண்டவம் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி சீர்காழிக்கு பெருமை சேர்த்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து சொந்த ஊரான சீர்காழி வந்தடைந்த அவரை சீர்காழி ரயில் நிலையத்தில் பொதுமக்கள் சார்பாகவும் அவரது உறவினர்கள் மற்றும் சீர்காழி நகர பாஜக சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளித்து, மாணவிக்கு சால்வை அணிவித்து வெகுவாக பாராட்டினர். மேலும் யோகா மாணவி சுபானு பல்வேறு நாடுகளில் யோகா போட்டிகளில் பங்கு பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Gold, Silver Price Today : 41 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...! இப்படியே போனா என்ன பண்றது..?