மேலும் அறிய

மஹாளய அமாவாசை : மயிலாடுதுறையில் கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்ல தடை

’’தர்பணம் செய்வதற்காக நீர்நிலைகளில் மக்கள் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை’’

ஆடி அமாவாசை போன்று மஹாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது  ஐதீகம். இதனால் மகாளய அமாவாசையை அன்று புண்ணியஸ்தலங்களிலும், கடற்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

மஹாளய அமாவாசை : மயிலாடுதுறையில் கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்ல தடை

ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறு வருகிறது. 

மஹாளய அமாவாசை : மயிலாடுதுறையில் கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்ல தடை

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கு படை எடுப்பதும் வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை முன்னேற்பாடு காரணமாக நாளை 6 ஆம் தேதி கடற்கரை, காவிரி கரை மற்றும் கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துள்ளார்.

மஹாளய அமாவாசை : மயிலாடுதுறையில் கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு செல்ல தடை

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் தாக்கம் சிறிது கட்டுக்குள் இருந்தாலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவேரின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா 3 வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில். இதன் காரணமாக தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா பரவலை பொறுத்து  கட்டுபாடுகளை விதிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னிட்டு ஆண்டுதோறும்  மயிலாடுதுறை மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி, தரங்கம்பாடி கடற்கரை, பூம்புகாரில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னேர்களுக்களுக்கு தர்பணம் கொடுப்பது வாடிக்கை.  புரட்டாசி மஹாளய அமாவாசை முன்னிட்டு காவிரி ஆறு மற்றும் கடற்கரைகளில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க திரண்டால் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை மற்றும் காவிரி ஆறுகளில் பொது மக்கள் கூட நாளை 6 ஆம் தேதி  தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget