மேலும் அறிய
Advertisement
அவசரகால தேவை என்பதை பயன்படுத்தி குடியிருப்பு வாசிகளிடமிருந்து நிலத்தை பறிப்பது தவறு - மதுரை உயர்நீதிமன்றம்
தஞ்சாவூரில் விமான படை பயிற்சி மையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு, மாற்று இடம் கொடுக்க, அவசரகால தேவை என்ற அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு - உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை.
தஞ்சாவூரில் உள்ள விமான பயிற்சி மையத்திற்கு தேவையான நிலங்களை அரசு ஏற்கனவே கையகப்படுத்தி உள்ளது. அவ்வாறு கையப்படுத்திய நிலங்களை, விமான நிலையத்திற்காக உபயோகப்படுத்துகிறது. அந்த விமான பயிற்சி மையத்திற்கு நிலங்களை கொடுத்தவர்கள் மாற்று நிலம் கேட்டனர். அவ்வாறு நிலம் கொடுத்தவர்களுக்கு நிலம் கொடுப்பதற்காக , அருகில் ஏற்கனவே முறைபடி குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். குடியிருப்பு வாசிகளிடம் நிலம் கையகப்படுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் அவசர உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், எமர்ஜென்சி கிளாஸ் அவசரகால தேவை என்ற அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு என்று உத்தரவிட்டார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கானது நீதிபதிகள் சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மேல்முறையீட்டு வழக்கானது, மாவட்ட ஆட்சியர் எமர்ஜென்சி கிளாஸ் அதாவது அவசரகால நிமித்தம் என்ற அடிப்படையில் நிலம் கையகப்படுத்த போட்ட உத்தரவு செல்லாது .
அதுபோல விமான பயிற்சி மையத்திற்கு, நிலம் கொடுத்தவர்களுக்கு, மாற்று இடம் கொடுப்பதற்காக, முறைபடி வசித்து வரும் மற்றொரு குடியிருப்பு வாசிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவது ஏற்புடையது அல்ல என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தஞ்சாவூரில் விமான படை பயிற்சி மையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு, மாற்று இடம் கொடுக்க, அவசரகால தேவை என்ற அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது தவறு. அவசரகால தேவை என்ற பிரிவை பயண்படுத்தி, உரிய முறைபடி அங்கு குடியிருந்து வரும் குடியிருப்பு வாசிகளிடமிருந்து, நிலத்தை பறிப்பது தவறு என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானம் அரசு நிகழ்ச்சிகளை நடத்த மட்டுமே பயன்படுத்தப்படும். மைதானத்தை சேதப்படுத்துவதும், அங்கு இருக்கும் மரங்களை வெட்டுவதும் நடைபெறாது- அரசுத்தரப்பில் மதுரைக்கிளையில் உறுதி
தஞ்சையை சேர்ந்த சங்கர், "தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியின் மைதானத்தில் கூட்டங்களை நடத்துவதற்கோ, தற்காலிக வாகன நிறுத்தமாக பயன்படுத்துவதற்கோ அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு, "நிகழ்வுகளை நடத்துவதற்காக மைதானத்தை பயன்படுத்த அனுமதி பெற்றால் மைதானத்தை பயன்படுத்த மட்டும் வேண்டும். அது தவிர மரங்களை வெட்டவோ, அங்கு இருக்கும் கட்டமைப்புகளை சேதப்படுத்துவதற்கோ எவ்வித அதிகாரமும் இல்லை என குறிப்பிட்டனர். தொடர்ந்து அரசு தரப்பில், "தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மைதானம் அரசு நிகழ்ச்சிகளை நடத்த மட்டுமே பயன்படுத்தப்படும். மைதானத்தை சேதப்படுத்துவதும், அங்கு இருக்கும் மரங்களை வெட்டுவதும் நடைபெறாது என உறுதி அளிக்கப்பட்டது
இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion