மேலும் அறிய
Advertisement
Prabhakaran Alive: பிரபாகரன் எங்கே இருக்கிறார்...எப்போது வருவார்..! - பழ. நெடுமாறன் முழு பேட்டி இதோ
பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பு மூலம் நான் அறிந்த செய்தியை அவர்கள் அனுமதியுடன் தற்போது தெரிவித்திருக்கிறேன்.
தஞ்சாவூர்: பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு மன்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட ஐயம் இருக்கும். இந்த செய்தியில் தற்போது இது உறுதியாக இருக்கும் என்பதை நம்புகிறேன். தமிழீழம் பற்றி விரிவான திட்டத்தை அறிவிக்க இருக்கிறார். உலகத்தில் உள்ள அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவிற்கு எதிராக சீனா செயல்படுகிறது இதனை தடுக்க முற்பட வேண்டும். பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பு மூலம் நான் அறிந்த செய்தியை அவர்கள் அனுமதியுடன் தற்போது தெரிவித்திருக்கிறேன். எங்கே இருக்கிறார் எப்போது வருவார் என்பது உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களுக்கும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
ஆனால் விரைவில் அவர் வெளிப்படுவார். அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். சர்வதேச சூழல் அன்று கை விரித்தது. ராஜபக்சேவை ஆட்சியில் அமர வைத்த அதே சிங்கள மக்கள் அவரை தற்போது நாட்டை விட்டு விரட்டி இருக்கிறார்கள். இதைவிட நல்ல சூழல் எதுவாக இருக்காது.
இந்த சூழ்நிலையில் இந்திய மக்களுக்கு ஆதரவாக ஈழத் தமிழர்கள் இருப்பார்கள். இந்த செய்தி ஈழத் தமிழர்களுக்கு நன்மையும் கொடுக்கும். நம்பிக்கையும் கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் உள்ள பேயிழித்தமிழர்களுக்கு பல நெடுமாறன் தெரிவித்த தகவல் மாபெரும் மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எவ்விதஐயமும் இல்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion