மேலும் அறிய

அடகு வைத்த நகைகளை மோசடி செய்த பஜாஜ் பைனான்ஸ் மேலாளர் மீது வழக்குப்பதிவு

எங்கள் பகுதியிலுள்ள ஏழை பெண்களிடம், அடமானம் வைத்த நகைகளை மீட்டு, குறைந்த வட்டிக்கு அதிக பணம் தரும் நிறுவனத்தில் அடமானம் வைக்க உதவுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி, பலரின் நகைகளை மாற்றி வைத்துள்ளார்.

நகையை ஏமாற்றி அபகரித்த பஜாஜ் நிதி நிறுவன சேல்ஸ் மேனேஜர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு-மன உளைச்சலில் தவிக்கும் எலக்ட்ரிக்ல் இன்ஜினியர்

தஞ்சாவூர், மருத்துவக்கல்லூரி சாலை, கிருஷ்ணாபுரம், புகழேந்தி சாலையை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் அமர்நாத். இவர் எலக்டிரிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகின்றார். அமர்நாத்தின் தந்தை ராமலிங்கத்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை அளிக்க பணம் தேவைப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மருத்துவ செலவிற்காக, தனது மனைவியின் 40.08 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை தஞ்சை மேலவீதியுள்ள பஜாஜ் பைபான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள சேல்ஸ் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி மூலம் 1,38,440 ரூபாய் கடனாக பெற்று, அதற்கு உண்டான அடமான ரசிதும் பெற்றுள்ளார்.

பின்னர், நகையை அடகு வைத்த ஒரு வாரத்தில் அமர்நாத்தின் தந்தை ராமலிங்கம் இறந்து விட்டார். தொடர்ந்து எனது செல்போன் எண்ணுக்கு நிதி நிறுவனத்தின் மூலம் அடகு வைத்த நகைக்கு வட்டி செலுத்துமாறு தகவல் அனுப்பி வந்தனர். அதன்படி கடந்த மார்ச் 21 ஆம் தேதியன்று நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று, கொரோனா தொற்று காலமாக வருமானமில்லாமல் உள்ளேன், எனது தந்தையைாரும் இறந்ததால் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளேன், தேர்தல் காலமாக இருப்பதால், பணத்தை யாரிடமும் வாங்க முடியாது, வெளியில் எடுத்து வரமுடியாது என்று கூறி விரைவில் வட்டியிடன் பணத்தை செலுத்தி நகையை மீட்டுக்கொள்கிறேன் என்று கூறி காலஅவகாசம் கேட்டுள்ளார்.

பின்னர் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதியன்று காலை 11.30 மணியளவில் நிதி நிறுவனத்திற்கு அடமானம் வைத்த நகையை மீட்க அசல் மற்றும் வட்டியுடன் அமர்நாத் பணத்தை எடுத்து சென்ற நிலையில் அலுவலகத்திலிருந்த சேல்ஸ் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, அமர்நாத்திடம், உங்கள் நகையை எங்கள் நிறுவன மேலதிகாரிகள் ஏலத்திற்காக எடுத்து சென்றுவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். அதற்கு அமர்நாத், அடகு வைத்த நகைக்கான கால அவகாச நாள் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வரை உள்ள போது, நகையை யார் எடுத்து சென்றது என்று தெரியப்படுத்த வேண்டும், இந்த செயல் முற்றிலும் ஏமாற்று வேலை என்று கூறி நகையை திருப்பி கொடுக்குமாறு மிகவும் பணிவுடன் அமர்நாத் கேட்டுள்ளார்.

அதன் பிறகு தினந்தோறும் நிதி நிறுவனத்திற்கு சென்று நகையை, சேல்ஸ் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது, அருகிலுள்ள அலுவலர்களிடம் கேளுங்கள், நாளை வாருங்கள், மற்றொரு அலுவலர் விடுப்பில் உள்ளார் என அலைகழித்தார். இதனால் ஆத்திரமடைந்த அமர்நாத், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அளித்தார்.  புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட எஸ்பி விசாரணை செய்தார்.  விசாரணையில், 294(b),406, 420, 506(1), ஆகிய நான்கு பிரிவின் கீழ் கிருஷ்ணமூர்த்தி மீது, மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து அமர்நாத் கூறுகையில்,

கிருஷ்ணமூர்த்தி, பஜாஜ் நிதி நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அவர், எங்கள் பகுதியிலுள்ள ஏழை பெண்களிடம், அடமானம் வைத்த நகைகளை மீட்டு, குறைந்த வட்டிக்கு அதிக பணம் தரும் நிறுவனத்தில் அடமானம் வைக்க உதவுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி, பலபேரின் நகைகளை, வங்களிலுள்ளதை மாற்றி, வைத்துள்ளார். இதற்காக அடமானம் வைத்த நகையை மீட்க கிருஷ்ணமூர்த்தியே பணம் கொடுப்பார்.  இதே போல் எனது தந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதை, அறிந்த கிருஷ்ணமூர்த்தி எனது குடும்ப வறுமையை  தெரிந்து கொண்டு, இந்தியன் வங்கியில் அடமானம் வைத்துள்ள நகையை மீட்டு, அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி, பஜாஜ் நிதி நிறுவனத்தில் எனது நகைகளை அடமானம் வைத்தார். ஆனால் காலஅவகாசம் இருந்தும், ஏலம் விடுவதற்கான எந்த விதமான தகவல்கள் கொடுக்காமல் கிருஷ்ணமூர்த்தி ஏலம் விட்டுள்ளார். இதனால் எனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, மிகவும் மனகுழப்பத்தில் உள்ளேன். எனவே, காவல்துறை எனது நகைகளை மீட்டு தர வேண்டும், இது போல் கிருஷ்ணமூர்த்தி வேறு யாரையாவது ஏமாற்றி உள்ளாரா என விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை! மீறினால் ரூ.250 கோடி அபராதம்! - வருகிறது புது சட்டம்!
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Fengal Update: கடைசியில் ஏமாற்றிய ஃபெங்கல்.! புயல் உருவாகாது என வானிலை மையம் அறிவிப்பு
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்;  ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
Sarigama Dharshini: ஸ்கூலுக்கு 5 கிலோமீட்டர் நடக்கணும்; ஜீ தமிழ் சரிகமப தர்ஷினியின் தந்தை கூறிய அவலம்!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
அஜித் பட தயாரிப்பாளர் மகனுடன் சமந்தா டேட்டிங்கா? அப்போ அந்த நடிகரின் முன்னாள் காதலி நிலைமை!
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
Ilayaraja Vs Vetrimaran: இளையராஜாவையே கடுப்பாக்கிய வெற்றி மாறன்! புலம்பி கொட்டிய இசைஞானி; என்ன செய்தார் தெரியுமா?
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
Embed widget