மயிலாடுதுறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் தமிழக தீயணைப்பு டிஜிபி ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் காழியப்பநல்லூரில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் தமிழக தீயணைப்பு டிஜிபி ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூரில் உள்ள தரங்கம்பாடி தாலுகா தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தமிழக தீயணைப்பு துறை டிஜிபி பி.கே. ரவி ஆய்வு செய்தார். ஆய்வில் மீட்பு உபகரண கருவிகள் மற்றும் தீயணைப்பு வாகனத்தை முழுமையாக ஆய்வு செய்தார். இதில் ஒவ்வொரு மீட்பு பணி உபகரணங்களையும் இயங்கச் செய்து சரியான பராமரிப்பில் உள்ளதாய் என ஆய்வு செய்து கேட்டறிந்தார். ஆய்வின் போது மேலும் அலுவலகத்தில் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.
இதில் சிறப்பு நிலைய அலுவலர் அருண்மொழி மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்பு துறை டிஜிபி பி.கே. ரவி, பருவமழை ஒட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும், தீயணைப்பு வாகனங்கள் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வெள்ளம் மழை பாதிப்புகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையையும் பொருட்படுத்தாமல் நடவு பணிகளை மேற்கொண்ட விவசாயிகள். கொட்டும் மழையில் பாய் நாற்றங்கள் தயாரித்தல் நடவு உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டு 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகள் நடவு பணிகள் மேற்கொண்டு உள்ளனர். ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதிகளில் தீவிரமாக நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த சில நாட்களாக மழைபெய்து வந்த நிலையில் இரண்டு நாளாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடவுபணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை, வழுவூர், பண்டாரவடை, மங்கைநல்லூர், பெரம்பர், செம்பனார்கொவில், கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாய் நாற்றங்கால் தயார் செய்தல், நாற்றுப் பறித்து நடுதல், நிலத்தை சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாள் பயிரான ஆடுதுறை 38, ஆடுதுறை 54, ஆடுதுறை 46, ஆந்திரா பொன்னி, கோ 50, IR 20 ஆகிய நெல் ரகத்தை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் சம்பா தாளடி சாகுபடிக்கு ஏற்ற வகையில் அமையும் என்றும், இதன் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும் என்றும் கூறும் விவசாயிகள், விதை, உரம் மற்றும் இடு பொருள்களை போதுமான அளவு வேளாண்மைதுறை மூலம் தட்டுபாடின்றி தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.