மேலும் அறிய
Advertisement
நாகையில் போலி ஆவணங்கள் மூலம் கோயில் இடத்தை பட்டா மாற்றம் செய்த விஏஓ மீது வழக்கு பதிவு
சுப்பிரமணிய சுவாமிகோயிலுக்குச் சொந்தமான 46 லட்சம் மதிப்பிலான 214 சதுர மீட்டர் இடத்தை போலியாக ஆவணங்கள் தயார் செய்து அவரது தாயார் மலர்க்கொடிக்கு பட்டா செய்து கொடுத்துள்ளார்
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் நாகை புத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கைங்கர்ய சபாவின் தலைவராக உள்ளார். புத்தூர் பகுதி விஏஓ செல்வம். இவர் புத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 46 லட்சம் மதிப்பிலான 214 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தை கடந்த 2020ம் ஆண்டு போலியாக ஆவணங்கள் தயார் செய்து அவரது தாயார் மலர்க்கொடிக்கு பட்டா செய்து கொடுத்தார். பின்னர் அந்த இடத்தை தனது சகோதரர் தினகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தானம் செய்து கொடுத்து பட்டா மாற்றம் செய்தார்.
இதை அறிந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கைங்கர்ய சபாவின் தலைவர் சண்முகம் கோயில் இடத்தை மீட்டுத்தரகோரி நாகப்பட்டினம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கடந்த 13ம் தேதி புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் போலியாக ஆவணம் தயார் செய்து பட்டா மாற்றம் செய்த விஏஓ செல்வம், அவரது தாய் மலர்க்கொடி,சகோதரர் தினகரன் ஆகிய 3 பேர் மீது போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
கீழ்வேளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 841 லிட்டர் சாராயம் நீதிமன்ற உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிப்பு
தமிழ்நாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதுபான வகைகள் அரசு மதுபான கடைகளில் விற்கப்படுகிறது. பாண்டி சாராயம், ஸ்பிரிட், பவுடர் சாராயம் உள்ளிட்டவைகளை தமிழகப் பகுதிகளில் எடுத்து வருவதற்கும் விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் அருகாமையில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து குறைந்த விலையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள சாராய மது வகைகளை வாகனங்கள் மூலம் தமிழக பகுதிகளுக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதும் அதை சோதனை சாவடிகள் மற்றும் அந்தந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட காவலர்கள் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அழைத்து வருகின்றனர் இதையும் மீறி விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2020 ,2021 வருடம் காரைக்கால் மற்றும் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் ( ஸ்பிரிட்) நாகப்பட்டினம் இரண்டு வழக்குகளில் 841லிட்டர் கைப்பற்றப்பட்டது .இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமான கோப்புகளை தாக்கல் செய்து இருந்தனர்.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நாகை மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் குணசேகரன் முன்னிலையில் பிளாஸ்டிக் கேன்களில் வைக்கப்பட்டிருந்த 841லிட்டர் சாராயத்தை ( ஸ்பிரிட்) போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் குழிவெட்டி அதில் கொட்டி தீட்டு அழித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion