மேலும் அறிய

விடிய, விடிய வெளுத்தெடுத்த கனமழை... இளம் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா - தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று மாலையில் தொடங்கிய கனமழை  விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் இளம் சம்பா, தாளடி நாற்றுகள் நீரில் மூழ்கி விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,466 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா - தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பல்வராயன் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான விளைநிலங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இடுப்பளவு  தண்ணீரில் நாற்று நடவு செய்து 15 நாட்களே ஆன இளம் சம்பா - தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வராதால் மழைநீர் வடியாமல் விளைநிலங்களில் தேங்கியிருப்பதாகவும், மழை நீர் தொடர்ந்து தேங்கி இருப்பதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர்  செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் தஞ்சை அருகே பல்லவராயன் பேட்டை பகுதியில் மழையால் வயலில் பெருமளவில் தேங்கிய தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வடிகால் வாய்க்கால்களை  தூர்வாராததால்  தான்  வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.  எனவே வடிகால் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் , பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீடு செய்ய வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை, நல்வழி கொல்லை, பாலமுத்தி ஆகிய கிராமங்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் இப்பகுதியில் உள்ள வாத்தலை வாய்க்கால் எனப்படும் வாய்க்காலில் ஆளடிக்குமுளை கிராமத்தில் தொடங்கி பால முத்தி வரையில் கோரைப் புட்கள் மண்டி கிடக்கிறது.

இதனால் மழை நீர் வெளியேறாமல் தேங்கிய நிலையில் மழை நீர் வயலுக்குள் புகுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் கடன் வாங்கி கஷ்டப்பட்டு  பயிரிடப்பட்ட நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது. இது பற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த வாய்க்காலை தூர்வார வேண்டுமென பலமுறை அதிகாரிகள் இடத்தில் கோரிக்கை வைத்தும்  மூன்று வருடத்திற்கு ஒருமுறை தான் எஸ்டிமேட் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்  

பசி என்பது மூன்று வருடத்திற்கு ஒருமுறை வருவது கிடையாது கஜா புயலில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த நிலையில் நெற்பயிர்களை நம்பி இருந்த எங்களுக்கு தற்போது வாய்க்கால் தூர்வாரப்படாததால் நெற்பயிர்களும் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் வாய்க்காலை தூர்வாரி பயிர்களை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Embed widget