மேலும் அறிய

வெளுத்தெடுத்த மழை... தஞ்சை, அரியலூரில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சாவூர் மற்றும் அரியலூரில் தொடர்ந்து பெய்த மழையால் வெயில் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. இந்த மழை நாற்றின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மற்றும் அரியலூரில் தொடர்ந்து பெய்த மழையால் வெயில் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. மேலும் நாற்று நட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் சில பகுதிகளில் பெய்த மழை நாற்றின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே கோடைகாலம் போல் வெயில் கொளுத்தி எடுத்தது. பகல் முழுவதும் வெயில் கொளுத்தியதால் இரவு நேரத்திலும் அதிகளவு வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர். ஏப்ரல், மே மாதங்களை போன்று வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதால் அனைத்து தரப்பினரும் பாதிப்பு அடைந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளது.

தஞ்சை மாநகரில் இன்று அதிகாலை மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடியற்காலை 3 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. காலை 8 மணி வரைக்கும் மழை பெய்தது. இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

குறிப்பாக சம்பா, தாளடி சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகள் போதுமான ஆற்று தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வந்தனர். தற்போது கனமழை பெய்ததால் அவர்கள் சாகுபடி பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் மட்டும் தாமதமாக விவசாயிகள் நாற்று நட்டுள்ளனர். இந்த இளம் நாற்றுகள் மட்டும் நீரில் மூழ்கி உள்ளது. பல பகுதிகளில் நாற்று நட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆவதால் இவை நன்கு வளர்ச்சியடையும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சில பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணி நடைபெற்று வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் தளர்வு அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு: ஒரத்தநாடு-64, பட்டுக்கோட்டை-32, அதிராம்பட்டினம்-32, மதுக்கூர்-25, நெய்வாசல்தென்பாதி-21, திருக்காட்டுப்பள்ளி-21, தஞ்சை-20, பூதலூர்-18, வெட்டிக்காடு-18, ஈச்சன்விடுதி-16, பேராவூரணி-16, பாபநாசம்-2, வல்லம்-1, கல்லணை-1.

இதேபோல் அரியலூரிலும் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டு சிறு மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் நல்ல மழை பெய்தது. சிறு தூறலுடன் ஆரம்பித்த மழை, இடி மின்னலுடன் கூடிய கனமழையாக பெய்தது. இதனால் தெருக்களில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் விஜயதசமி பூஜைக்காக தரைக்கடை போட்டு இருந்த சிறுவியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

கனமழையால் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதே வேளையில் மாணவரி பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களுக்கு இந்த மலை பெரிதும் உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
தூதர்கள் மூலம் சிக்னல் அனுப்பிய ஈரான்.. பைடனிடம் கை விரித்த நட்பு நாடுகள்.. ஷாக்கான இஸ்ரேல்!
"இஸ்ரேலுக்கு உதவாதீங்க" தூதர்கள் மூலம் வார்னிங் கொடுத்த ஈரான்.. அமெரிக்காவிடம் கைவிரித்த நட்பு நாடுகள்
அதிநவீன ராணுவ உபகரணங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்.. ராணுவ வீரர்களுடன் தசரா கொண்டாட்டம்!
அதிநவீன ராணுவ உபகரணங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்.. ராணுவ வீரர்களுடன் தசரா கொண்டாட்டம்!
Embed widget