மேலும் அறிய
நாகப்பட்டினத்தில் பெய்த கனமழை - பள்ளிக்கு செல்லாத மாணவர்கள்...! கடலுக்கு செல்லாத மீனவர்கள்...!
’’கரை திரும்புவதால் அவர்களுக்கு ஒரு படகுக்கு சுமார் 3 லட்சம் முதல் 8 லட்சம் வரை நஷ்டமடைந்து உள்ளதாக வேதனை’’
![நாகப்பட்டினத்தில் பெய்த கனமழை - பள்ளிக்கு செல்லாத மாணவர்கள்...! கடலுக்கு செல்லாத மீனவர்கள்...! Heavy rain in Nagapattinam - Students not going to school ...! Fishermen who do not go to sea ...! நாகப்பட்டினத்தில் பெய்த கனமழை - பள்ளிக்கு செல்லாத மாணவர்கள்...! கடலுக்கு செல்லாத மீனவர்கள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/09/fde20392adc224b094e756b6d41a1c57_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாகப்பட்டினம் மாவட்டம்
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் நாகை மாவட்ட மீனவர்கள் இன்று 2 ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழில் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிப்பு.
![நாகப்பட்டினத்தில் பெய்த கனமழை - பள்ளிக்கு செல்லாத மாணவர்கள்...! கடலுக்கு செல்லாத மீனவர்கள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/09/2399ed0c410d9db2752ad37619a2f454_original.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 26 ஆம் தேதி தொடங்கியதை தொடர்ந்து தற்போது வரை நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வழிமமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை மிககனமழை கொட்டி தீர்த்து குடியிருப்பு ஏரியாக்கள் ஏரியை போல் காட்சியளித்தது வருகிறது. மேலும் வழி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரிக்கடல் மன்னார் வளைகுடா இலங்கையை ஒட்டியுள்ள கடற்பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 40-முதல் 60-கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 9-ம் தேதிக்குள் கரை திரும்பவும் வரும் 13ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்தது. இந்நிலையில் கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் காரணத்தால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் நீர் சூழ்ந்த தோடு சம்பா, தாளடி பயிர்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மழைநீர் சூழ்ந்ததால் 25 நாட்கள் வளர்ந்த பயிர்கள் பாதிப்படைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
![நாகப்பட்டினத்தில் பெய்த கனமழை - பள்ளிக்கு செல்லாத மாணவர்கள்...! கடலுக்கு செல்லாத மீனவர்கள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/09/78a3f03d9815c2ceeff7a209b2147927_original.jpg)
மாவட்ட நிர்வாகம் சார்பில் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் சாலை பழுதடைந்துள்ளது.இன்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் கடல் பரப்பில் 40 முதல் 60 மீட்டர் காற்று வீசக்கூடும் என்பதாலும் வரும் 13ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களும் அவசரகதியில் கரை திரும்பி வருகின்றனர்.
500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 3500 மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர் மீனவர்கள் வானிலை மையம் அறிவிப்பு க்கு முன்பு ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் போதிய மீன்கள் கிடைக்காமல் அவசரகதியில் கரை திரும்புவதால் அவர்களுக்கு ஒரு படகுக்கு சுமார் 3 லட்சம் முதல் 8 லட்சம் வரை நஷ்டமடைந்து உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இலங்கை கடற்படை, இலங்கை மீனவர்கள், இலங்கை கடற் கொள்ளையர்கள் மற்றும் இயற்கை சீற்றத்தினால் தொடர்ந்து வாழ்வாதாரம் பாதித்து வருவதால் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
![நாகப்பட்டினத்தில் பெய்த கனமழை - பள்ளிக்கு செல்லாத மாணவர்கள்...! கடலுக்கு செல்லாத மீனவர்கள்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/09/e6b07a0fb9cdccdde711213c618b5edc_original.jpg)
தொடர்ந்து மாவட்டத்தில் நாகை, திட்டச்சேரி, திருமருகல், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, மீனம்மநல்லூர், கீவளூர், தேவூர், கீழையூர், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, புஷ்பவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.மாவட்டத்தில் தீயணைப்புத் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி, பொதுப்பணித்துறை என அனைத்து துறை அதிகாரிகளும் புயல் வெள்ளம் மற்றும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion