தஞ்சாவூரில் உள்ள சிக்கல்நாய்க்கன்பேட்டை கலம்காரி ஒவியத்திற்கு புவிசார் குறியீடு அறிவிப்பு
களம்காரி ஒவியத்தால் வரைந்த சேலைகளை, லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், மும்பை சத்ரபதி சிவாஜி மியூசியம், அகமதாபாத் காலியோ மியூசியம், டெல்லி நேஷனல் மியூசியங்களில் வைக்கப்பட்டுள்ளன
செவ்வப்ப நாயக்கர் காலத்தில் 20-க்கும் மேற்பட்ட கலம்காரிக் கலைக் குடும்பங்கள் தஞ்சாவூருக்கு அழைத்து வரப்பட்டன. அவர்களுக்கென்று தஞ்சாவூர் அரண்மனையை ஒட்டிய பகுதிகளில் இடம் வழங்கப்பட்டது. தாங்களே துணியை நூற்று, கலம்காரி சித்திரம் வரைந்து அரச குடும்பத்துக்கு ஆடைகளையும், அரண்மனை அலங்காரத் துணிகளையும், திரைச்சீலைகளையும் வழங்கினார்கள் இந்தக் கலைஞர்கள். நாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, இந்தக் குடும்பங்கள் வெவ்வேறு பகுதிகளுக்குச் சிதறி, கலையில் இருந்தும் விலகிவிட்டன. செவ்வப்ப நாயக்கர் காலத்துக்குப் பிறகு, சில கலம்காரிக் கலைஞர்கள் பக்கத்துல இருக்கிற கோடாலிக்கருப்பூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களுக்க தெரிந்த ஒரே தொழில் நெசவும் சித்திரமும்தான். காலப்போக்கில் இயற்கை வண்ணங்களால் சேலைகள் தயாரித்து வியாபாரம் செய்தார்கள். அடர் நிறங்களில், ஒரிஜினல் தங்க ஜரிகைகள் கொண்டு நெய்யப்பட்ட ராஜகலை மிகுந்த சேலைகளை சாதாரண மக்கள் வாங்குவதற்கு யாரும் இல்லை. விலை போகவில்லை. இன்றைக்கு களம்காரி ஒவியத்தால் வரைந்த சேலைகளை, லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், மும்பை சத்ரபதி சிவாஜி மியூசியம், அகமதாபாத் காலியோ மியூசியம், டெல்லி நேஷனல் மியூசியம்னு பல இடங்கள்ல அபூர்வமான கலைப்பொருளாக பாதுகாக்கின்றார்கள்.
அதன்பிறகு, சிலர், கைலி நெசவு செஞ்சு, நாகப்பட்டினம் துறைமுகம் மூலம் ஈரான், ஈராக் நாடுகளுக்கு எல்லாம் அனுப்பினார்கள், போதுமான வருமானம் இல்லாததால்க, பல குடும்பங்கள் சேலம், சென்னைனு பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டார்கள். கலம்காரிக்கான வரைபொருட்கள், வண்ணங்கள் அனைத்தையும் ஓவியரே தன் கைப்பட தயாரித்து கொள்வார்கள். ஓவியம் வரைய ஆயத்தமாகும் முன், துணியை பக்குவப்படுத்த வேண்டும். சுத்தமான காடாத்துணியை கோவை, ஈரோடு பகுதிகள்ல இருந்து வரவழைத்து, அவர்கள், நெசவு செஞ்சு, கஞ்சிபோட்டு அனுப்புவாங்க. அதை நெடுங்காலம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும், வண்ணங்கள் படியவும், பதப்படுத்தணும். 10 மீட்டர் துணியைப் பதப்படுத்த, கறந்து சூடு மாறாத பசும்பால் 5 லிட்டர், பிஞ்சுக் கடுக்காய்த்தூள் 100 கிராம், மஞ்சள் 150 கிராம், பசுஞ்சாணம் 3 கிலோ தேவை. எல்லாத்தையும் 25 லிட்டர் தண்ணியில கரைச்சு, வடிகட்டி காடாத்துணியை 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு, நேரடியா வெயில்படாத இடத்துல விரிச்சு, காயவைத்து, நல்லா மடிச்சு, மரச்சுத்தி வச்சு அரை மணி நேரத்துக்கு மேல அடிச்சு, பெரிய பாரத்தை வைத்த துணி வெளிர் மஞ்சள் நிறத்துல அயர்ன் பண்ணின மாதிரி ஆகிடும். இது போன் துணியை பதப்படுத்தினால் நீண்டகாலம் சிதையாமல், வண்ணங்கள், ஒவியம் அழியாமல் இருக்கும். துணி தயாரான உடன், தேவையான அளவுக்கு வெட்டிக்கொண்ட, 20 மீட்டர் நீளமுள்ள துணிகளில் வள்ளி திருமணம், அரிச்சந்திரன் கதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளை முழுக்கதைகளும் சித்திரங்களாவும், ராமாயணத்தை படிமமா ராமரை வரைஞ்சு அவருக்குள்ள மொத்த கதையையும் வரைவது, திருவிளையாடல் புராணம், கடை ஏழு வள்ளல்கள் ஆகியவைகள் வரைகின்றார்கள். துணியில வரையுறதுக்கு முன்பு, வெள்ளைக் காகிதங்களை ஒண்ணோட ஒண்ணா ஒட்டி, அதுல லே-அவுட் வரைஞ்சிருக்காங்க. இந்த லே-அவுட்டை வெச்சுத்தான் துணியில வரைந்துள்ளனர்.
ஒவியம் வரைவதற்கு, புளியமரத்தின் சிறு குச்சிகளைச் சேகரித்து, மிதமான தீயில் எரித்து, அந்தக் கரியை பென்சில் போல பயன்படுத்துகிறார்கள். இழுத்த பக்கமெல்லாம் ஓடியாடி நர்த்தனமாடுகிறது புளியங்குச்சி. முதலில், இந்தப் புளியக்குச்சியில் அவுட்லைனை வரைய வேண்டும். அதன் பிறகு, உள்வேலைகள். அவுட் லைனுக்குள் உருவங்கள் வரையப் பயன்படுத்தும் பேனாவுக்குப் பெயர்தான் கலம். நன்கு முற்றிய மூங்கில் குச்சிகளை வெட்டி, நடுப்பகுதியில் துணியைச் சுற்றிப் பிடிமானம் செய்து கொள்கிறார்கள். ஒரு முனையை நன்கு சீவி, பென்சில் முனை அளவுக்கு சீவி, அதில் வண்ணம் தொட்டு முக்கிய பாகங்களை வரைகிறார்கள். கலம்காரியின் ஒவியத்தில் கறுப்பு, சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் ஆகிய ஐந்து வர்ணங்களை கொண்டு வர்ணம் தீட்டுகின்றனர். வரைந்து முடிந்து, துணிகளில் உள்ள வண்ணங்கள் காய்ந்ததும், சித்திரம் குலையாமல் இருப்பதற்காகவும், துணியை பக்குவப்படுத்துவதற்காக, கொழுந்து வேப்பிலை, கடுக்காய், சுருளிப்பட்டை, பால், சாணம், ஆடாதொடை இலைச் சாறு, மஞ்சள் கலந்த தண்ணீரில் துணியை ஊறவைத்து நிழலில் உலர்த்துகிறார்கள். அதன் பிறகு முழுமை அடைகிறது.
கலம்காரி ஒவியத்தில் சேலை, திரைசீலைகள், கோயிலுக்கு தேவையான குடைகள், தேர்களை அலங்கரிக்கிற அசைந்தாடிகள், தொம்பைகள், வாசமாலைகள், சுருட்டிகள் தயாரிக்கின்றனர். தற்போது, நட்சத்திர விடுதிகள், வீடுகளின் இன்டீரியருக்கு கலம்காரி சித்திரத் துணிகளை விரும்பி வாங்குகிறார்கள். இத்தகைய உலக புகழ்பெற்ற கலம்காரி ஒவியம் கும்பகோணத்தை அடுத்த சிக்கல்நாயக்கன்பேட்டையிலுள்ள குடும்பத்தினர், பழமை மாறாமல் தயாரித்து வருகின்றார்கள். இந்நிலையில், சிக்கல்நாய்க்கன்பேட்டை, கருப்பூர் கலம்காரி துணி ஓவியத்துக்கு புவிசார் குறீயீடு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலம்காரி ஒவியர் கூறுகையில்,
கலம்காரியால், சிக்கல்நாயக்கன்பேட்டையே சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. தஞ்சைக்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டினர், இதை வெறும் கோயில் கலையாக மட்டும் வெச்சிருந்தால் மட்டும் போதாது, புது நுட்பங்களை உள்ளே கொண்டு வந்தததால், இதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போகணும். பூர்வீகம் ஆந்திராவாக இருந்தாலும், தஞ்சை ஓவிய மரபுகளில் ஒண்ணா சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி வளர்ந்திருக்கு. அதை உறுதிப்படுத்தும் விதமாக மியூசியம் ஆரம்பிக்கணும் என்றார்