மேலும் அறிய

’மத்திய அரசை தமிழ்நாடு அரசு மதிப்பதாலேயே விநாயகர் சதுர்த்திக்கு தடை’- கி.வீரமணி பேட்டி...!

''மத்திய அரசை வேறொரு கட்சி ஆட்சி செய்தாலும், அவர்களது அறிவிப்பை தமிழக அரசு மதிக்கிறது. அதனால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது''

மத்திய அரசின் ஆணையைப் புதுச்சேரி அரசு மதிக்கவில்லை

பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினை சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

 திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேட்டி

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூக நீதி  நாளாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றைய நாளில்  அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவித்திருப்பதும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனம். இந்த உறுதிமொழியில் உள்ள வாசகங்கள் ஒவ்வொருவரையும் உயர்த்தும் வகையில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்காகத் தந்தை பெரியார் தொடர்ந்து பணியாற்றினார் எனக் கூறி, சமூக நீதியை காக்க பாடுபட்ட பெரியாரின் பிறந்த நாளைச் சமூகநீதி நாளாக அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது பொற்கால ஆட்சியின் உதயமாக இருக்கிறது. இந்த  அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வரை சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருப்பதால், பொது இடங்களில் கூட்டம் சேரக்கூடாது என  மத்திய அரசின் உள்துறைச் செயலர் அறிவித்துள்ளார்.  மத்திய அரசை வேறொரு கட்சி ஆட்சி செய்தாலும், அவர்களது அறிவிப்பை தமிழக அரசு மதிக்கிறது. அதனால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது. ஆனால்,  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குப் புதுச்சேரி அரசு அனுமதி அளித்திருப்பதன் மூலம், மத்திய அரசின் விதிகளை அந்த அரசு மீறியிருப்பது தெரிய வருகிறது. மத்திய அரசில் அவர்களது கட்சியே ஆட்சியில் இருந்தாலும் கூட,  மத்திய அரசின் ஆணையைப் புதுச்சேரி அரசு மதிக்கவில்லை என்பது தெரிகிறது என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திராவிடர் கழக பொதுச் செயலர் இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலர் இரா. குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget