மேலும் அறிய

இன்ஜினியரிடம் பண ஆசை காட்டி 18 லட்சம் மோசடி! டெலிகிராம் மூலம் மோசடி கும்பல் கைவரிசை!

ஆன்லைனில் டாஸ்க்கை முடித்தால் அதிகம் லாபம் என்று ஆசைக்காட்டி இன்ஜினியரிங் பட்டதாரியிடம் இருந்து ரூ.18 லட்சம் மோசடி செய்த மர்மநபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்: ஆன்லைனில் டாஸ்க்கை முடித்தால் அதிகம் லாபம் என்று ஆசைக்காட்டி இன்ஜினியரிங் பட்டதாரியிடம் இருந்து ரூ.18 லட்சம் மோசடி செய்த மர்மநபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

டெலிகிராம் மெசேஜ்:

தஞ்சாவூர், ரெட்டிபாளையம் சாலை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் 43 வயது இன்ஜினியரிங் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்.1ம் தேதி இவருக்கு மர்ம நபரிடமிருந்து, டெலிகிராமில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

அதில் ஆன்லைன் வாயிலாக, வீட்டிலிருந்தபடி பகுதி நேரமாக, விமான நிறுவனத்திற்கு ரேட்டிங் வழங்கினால், தினமும் வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. உடன் அந்த இன்ஜினியரிங் பட்டதாரி அத்தகவலில் வந்திருந்த 'லிங்க்' மூலம் வாயிலாக சென்று அதில் குறிப்பிட்டிருந்த பணிகளை மேற்கொண்டார். சில தினங்களில் அவருடைய வங்கி கணக்கிற்கு சில ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்ட சிலர் அவரிடம் இன்னும் சில 'டாஸ்க்' செய்தால் அதிக லாபம் பெற முடியும்.

ரூபாய் 18 லட்சம் மோசடி:

அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அந்த இன்ஜினியரிங் பட்டதாரியும் பல தவணைகளாக 18.19 லட்சம் ரூபாயை ஆன்லைன் வாயிலாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தி உள்ளார்.

பல டாஸ்க்குகள் முடித்த நிலையில் லாபத்துடன் சேர்த்து தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவருக்கு எந்த பணமும் வரவில்லை. தொடர்ந்து அந்த டெலிகிராம் லிங்கில் தொடர்பு கொள்ள முயன்ற போது, தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அந்த இன்ஜினியரிங் பட்டதாரி, தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். 

இன்ஜினியரிடம் பண ஆசை காட்டி 18 லட்சம் மோசடி! டெலிகிராம் மூலம் மோசடி கும்பல் கைவரிசை!

போலீசார் எச்சரிக்கை:

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறியதாவது: உங்கள் இடத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளோம். பல லட்சம் முன்பணம், மாதந்தோறும் பல ஆயிரம் வாடகை தருவோம் என கூறி ஆவணங்கள் மற்றும் பணம் கேட்பார்கள். அப்படி  பணம் அனுப்ப வேண்டாம். இதே போல் உங்களுக்கு அறிமுகமான நபர்களின் பெயரில் போலி பேஸ்புக் வாயிலாக அவசர தேவை பணம் அனுப்பும் படி கேட்டால் பணம் அனுப்பக்கூடாது. தனியார் நிறுவனங்களின் பெயரில் போலியான வேலைவாய்ப்புகள் என்று வரும் குறுஞ்செய்தி,  இ-மெயில், ஆன்லைன் வேலை இணைய லிங்க் வாயிலாக விளம்பரங்களை அனுப்பி பணம் அனுப்ப கூறினாலும் அனுப்ப கூடாது.

இதேபோல் பைக்குகள், கார்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக போலி விளம்பரங்களை அனுப்பி குறிப்பிட்ட தொகை கேட்டால் பணம் செலுத்த வேண்டாம். அறிமுகம் இல்லாத எண் மூலம் வரும் ஆபாச வீடியோ அழைப்பை பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அதுபோன்ற அழைப்பை ஏற்க வேண்டாம். தனியார் கடன் செயலி மூலம் குறைந்த வட்டியில் கடனாக பெறலாம் என்று செல்போனுக்கு வரும் குறுஞ்செய்திகளை நம்பி கடன் வாங்க வேண்டாம்.

சைபர் கிரைம் போலீஸ்:

அவ்வாறு வாங்கும் கடன் தொகையை செலுத்த தாமதம் ஆகும் போது, பதிவு செய்த தனிப்பட்ட விபரங்கள் மூலம் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் புகைப்படங்களை திருடி ஆபாசமாக சித்தரித்து, மிரட்டி பணம் பறிக்கக்கூடும். மேலும் உங்களை பற்றி தவறான தகவல்கள் அனுப்பக்கூடும். இதனால் அதுபோன்ற செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம்.

தங்களது வங்கி கணக்கு, செல்போன் எண், புகைப்படம், முகவரி, ஆதார் மற்றும் பான்கார்டு உள்ளிட்ட விவரங்களை கேட்கும் எந்த ஆன்லைன் செயலிகளையும் பதிவிறக்கம் செய்யவேண்டாம். இதுபோன்ற மோசடிகள் மற்றும் ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற சைபர்கிரைம் போலீசாரின் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget