மேலும் அறிய

'நீ இஸ்லாமியர்.. நீ கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது' நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பொன்.மாணிக்க வேல்

மயிலாடுதுறையில் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நிருபரை மதத்தின் பெயரை கூறி கோயிலுக்கு வரக்கூடாது என மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "பழமைவாய்ந்த சட்டநாதர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் பணிக்காக குழி தோண்டிய போது ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டது. அதனை தற்போது அரசு கட்டுப்பாட்டில் கோயில் உள்ளே தனி அறை அமைத்து அதில் வைத்து பூட்டி சீல் வைத்து காவல்துறை பாதுகாப்பில் அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

நீ இஸ்லாமியர்.. நீ கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது' நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பொன்.மாணிக்க வேல்

அதனை அரசு கருவூலத்திற்கு எடுத்து செல்லக்கூடாது, அது கோயிலுக்கு தான் சொந்தமானது, அதனை அரசு எடுக்க முயன்றால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டும் என ஆவேசமாக பேசினார்.

மூன்றாவது கட்சிக்கு வாக்களிங்க:

தொடர்ந்து பேசிய பொன்.மாணிக்கவேல், மாவட்ட ஆட்சியர் அரசு கணக்கு பிள்ளையாக செயல் படமால் மக்களுக்காக செயல்பட வேண்டும், சில குசும்பு ஆட்சியரும் இருக்கின்றனர். அவர்களை மக்கள் சும்மா விட கூடாது எதிர்த்து கேள்வி கேளுங்க என்றார்.  இந்த சிலைகளை திருப்பி கோயிலுக்கு கொடுப்பதால் உங்களுக்கு என்ன தேர்தல் ஓட்டு போய்டுமா? திருப்பி கொடுத்தால் ஓட்டு எல்லாம் போய்டாது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்து தற்போது படி படியாக செய்வதாக கூறுவது ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதாகவும், இது என்ன டாஸ்மாக்கா? என கேள்வி எழுப்பியதோடு தற்போது தேர்தல் வருவதால் இரண்டு கட்சிகளும் ஏமாற்றி வருவதால் மூன்றாவது கட்சிக்கு வாக்கு அளிங்க என கூறினார்.

நீ இஸ்லாமியர்.. நீ கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது' நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பொன்.மாணிக்க வேல்

முதலமைச்சரை தாக்கிப் பேசிய பொன்.மாணிக்கவேல்:

நான் கோயிலுக்குள்ள வரவே மாட்டேன். ஆனால், ஆட்சி செய்வேன். அப்படி சொன்னா என்ன அர்த்தம்? தேர்தல் வரும் முன்னே சொல்ல வேண்டும் நான் கோயிலுக்குள்ள வர மாட்டேன் என் ஆளு வரானோ, என் வீட்டு கார அம்மா வருதோ எனக்கு தெரியாதுனு தேர்தலுக்கு முன்னே சொன்னா அது நேர்மை.

ஆனால், தேர்தல் முடிந்து இப்படி சொன்னா நான் ஏமாறா மாட்டேன் என தமிழக முதல்வரையும் அவரது குடும்பத்தையும் மறைமுகமாக தாக்கி பேசிய பொன்.மாணிக்கவேல், ஆங்கிலேயர் காலத்தில் ஆட்சியர்கள் மக்களை கண்டு பயந்தனர். ஆனால் தற்போது சுதந்திரம் அடைந்த பின்னர் உள்ள ஆட்சியர்களை கண்டு நாம் பயப்பட வேண்டியாதாக உள்ளதாகவும், எதிர்த்து கேள்வி கேளுங்க என தெரிவித்தார். 

நீ இஸ்லாமியர்.. நீ கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது' நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பொன்.மாணிக்க வேல்

இஸ்லாமியரை மிரட்டிய பொன்.மாணிக்கவேல்:

இந்துக்கள் அனைவரும் சொரணை இல்லாதவர்களாக பூமிக்கு அடியில் கிடைத்த திருமேனிகள் அனைத்தும் தஞ்சாவூரில் பூட்டி வைத்துள்ளனர். அதனை இந்துக்களே காசு கொடுத்த வரிசையில் நின்று பார்த்து வருவதாகவும், மற்றவர்கள் காசு கொடுத்து பார்த்தால் தப்பில்ல என அரசுக்கு எதிராக மக்களை தரகுறைவாக பேசினார்.

பின்னர்  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பேசிய பொன்.மாணிக்கவேல் உன் தாத்தா பெயர் என்ன? அவரோடு அப்பா பெயர் என அடுத்தடுத்து கேட்டு தெரிந்து கொண்டு மிரட்டல் தொனியில் நீ  இஸ்லாமியர் நீ எல்லாம் இங்கு வர கூடாது. உனக்கு இங்கு வர தகுதி இல்லை வெளியே போ என பேசியது கோயிலுக்கு வந்த பக்தர்களையும், செய்தியாளர்களை அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. இதனால் செய்தியாளர்கள் பொன்.மாணிக்கவேலுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீ இஸ்லாமியர்.. நீ கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது' நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பொன்.மாணிக்க வேல்

பின்னர் போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் சீர்காழி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் முன்னாள் ஐஜி.பொன். மாணிக்கவேலுக்கு கண்டனம் தெரிவித்ததை யடுத்து அங்கிருந்து பொன்.மாணிக்கவேல் விரைந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். ஒரு முன்னாள் ஐஜி.பொன்.மாணிக்கவேல் மக்கள், ஆட்சியர், முதல்வர், செய்தியாளர் என அனைவரையும் பாகுபாடு இன்றி தரக்குறைவாக பேசிய நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இன்றி, இவரது பேச்சுக்காக இவர்மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
நாளை தாயகத்தில் இந்திய கிரிக்கெட் அணி: பிரதமர் சந்திப்பு, பேரணி, பாராட்டு விழா: நிகழ்ச்சி நிரல்
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Zika virus:உஷார்! அதிவேகமாக பரவும் ஜிகா வைரஸ்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Embed widget