மேலும் அறிய

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10,000 மூட்டைகளுடன் 12 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

’’வேளாண்மைத்துறையினர் 1,05,000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,45,000 ஏக்கர் சாகுபடி நடைபெற்றுள்ளது’’

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் வேளாண்மைத்துறையினர் 1,05,000 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 1,45,000 ஏக்கர் சாகுபடி நடைபெற்றுள்ளது. குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதை வைத்து, விதை தெளித்து, 30 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் நாற்றை பறித்து வயல்களில் நடுவார்கள். பின்னர் அதிலிருந்து 130 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் மாதம் இறுதியில் அறுவடை செய்வார்கள். தற்போது ஆறுகளில் தண்ணீர் வந்தும்,  வாய்க்கால்களில் தண்ணீர் வராததால்,  பெரும்பாலானோர் ஆழ் குழாய் மின்மோட்டாரை கொண்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மின் மோட்டார் தண்ணீரை  கொண்டு குறுவை நடவு செய்துள்ளனர்.


நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10,000 மூட்டைகளுடன் 12 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கிற்கு மேல் வந்ததால், பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை நேரடி நெல்கொள் முதல் நிலையத்தில் கொட்டி வைத்து விற்பனை செய்வதற்காக காத்திருக்கின்றனர். அறுவடை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், கடந்த 16 ஆம் தேதியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் இன்று வரை கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. 

இதனால் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா, பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தில், விவசாயிகள்  அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டை  நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு மலைபோல் குவித்து வைத்துள்ளனர். கடந்த 12 நாட்களாக காத்திருந்தும் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் இரவில் பெய்யும் மழையில் நெல்மணிகள் நனைந்து  முளைத்துள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடிக்காக செய்த செலவு மிஞ்சுமா என்று வேதனையுடன் காத்திருக்கின்றனர். எனவே, தமிழக அரசு, உடனடியாக அறுவடை நடைபெறும் கிராமங்களில் நேரடிநெல் கொள் முதல் நிலையத்தை திறந்து போர்கால அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் இரவு நேரங்களில் பெய்யும் மழையில் நனைந்து, அனைத்து நெல் மணிகளும் பதறாகி விடும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.


நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் 10,000 மூட்டைகளுடன் 12 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்

இது குறித்து  தஞ்சாவூர் மாவட்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பாஸ்கர் கூறுகையில், ஒரத்தநாடு தாலுக்கா பகுதிகளில் நெல்மூட்டைகளை கொள் முதல் செய்யவில்லை. பொன்னாப்பூர், கண்ணந்குடி, மேலையூர், கிழையூர், புதுார், பேய்கரும்பன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையத்தில் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் வரை லஞ்சம் கேட்கிறார்கள்.  ஆனால் ஆட்சியாளர்கள், விவசாயிகளிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அதையும் மீறி வாங்குகிறார்கள். மேலும் கொள்முதல் நிலையத்திற்கு அலுவலர்களாக வருபவர்கள், பிஈ,, டிகிரி, பொறியியல் படித்தவர்களாக பணிக்கு வருவதால், அவர்களுக்கு விவசாயிகளின் நிலை தெரியாததால், வேலைக்கு சேர்வதற்கு ஆணை வாங்கி கொண்டு வீட்டிலேயே இருந்து விடுகிறார்கள்.

ஒரத்தநாடு தாலுக்காவில் ஒரு சில கொள்முதல் நிலையத்திற்கு அலுவலர்கள் வந்தாலும், சில மூட்டைகளை கொள் முதல் செய்து விட்டு சென்று விடுகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். திமுக ஆட்சி மேல் பொது மக்களிடையை தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால், ஒரத்தநாடு தாலுக்காவில் சுமார் ஒரு லட்சம் தேங்கியுள்ள நிலையில், இரவு பெய்யும் மழையினால், அனைத்து நெல் மணிகளும் நனைந்துவிடுகிறது. தற்போது பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைத்து விட்டன. கொள்முதல் நிலையம் திறந்து விற்பனை செய்வதற்குள், அனைத்து நெல் மணிகளிலும் நாற்றுக்கள் முளைக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு, கொள்முதல் நிலைய அதிகாரிகளை மாற்றம் செய்த நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும், போர்கால அடிப்படையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டும், தவறும் பட்சத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளின் நிலை கேள்வி குறியாகும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget