மேலும் அறிய
Advertisement
’பயிர்க்காப்பீடு இல்லை ஆனால் ப்ரீமியம் தொகை பிடித்தம்’ - வங்கிகளால் டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி..!
’’பிடித்தம் செய்த தொகையை உடனடியாக திருப்பி தர வேண்டும், குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டால் எங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்’’
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பிரதான சாகுபடி ஆகும். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்கள் இயற்கை சீற்றங்களால் எதிர்பாராமல் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை சந்திப்பதற்கு பயிர் காப்பீடு திட்டம் மிகுந்த உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 4.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில் மத்திய மாநில அரசுகள் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்தை ரத்து செய்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்து இருந்தனர். மேலும் பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டால் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் வைத்து வந்தனர். இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு இல்லை என்ற நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வைத்துள்ள வங்கி கணக்கில் இருந்து குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கான பிரீமியம் தொகையை வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்து உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும் வருவாயை நிலைப்படுத்தும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவர்களின் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்தாண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 70 சதவிகிதம் விவசாயிகள் ஆற்றுத் தண்ணீரை நம்பியும், 30 சதவீத விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது குறுவை சாகுபடி அறுவடை பணிகள் தற்பொழுது தொடங்கியுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் மழைநீரில் சாய தொடங்கியுள்ளன. இதனால் தாங்கள் செலவு செய்த தொகை கூட தங்களுக்குக் கிடைக்காத நிலை உண்டாகும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டமும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பல வேதனைகளை விவசாயிகள் நாங்கள் சந்தித்து வருகிறோம்.
இந்நிலையில் நாங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வங்கி கணக்கு வைத்து அதன் மூலமாக நகைக்கடன், பயிர்க்கடன், உள்ளிட்டவை பெற்று வருகிறோம். இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு இல்லை என அறிவித்த நிலையில், வங்கி நிர்வாகம் குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு பிரீமியம் தொகையை மட்டும் பிடித்தம் செய்துள்ளது. பயிர் காப்பீடு திட்டம் இல்லை என்ற நிலையில் பிரீமியம் தொகையை மட்டும் எப்படி வங்கி நிர்வாகம் விவசாயிகளின் அனுமதியின்றி பிடித்தம் செய்து உள்ளது என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்பியுள்ளனர். உடனடியாக தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக திருப்பி தர வேண்டும், அது மட்டுமின்றி குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டால் எங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் அரசுக்கு வைத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion