Ilayaraja Aayul Viruthi Homapoojai : திருக்கடையூர் கோயிலில் கோலாகலமாக நடந்த, இளையராஜாவின் ஆயுள் விருத்தி ஹோமபூஜை..
திருக்கடையூர் கோயிலில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி ஹோமபூஜை விழா நடைபெற்றது
![Ilayaraja Aayul Viruthi Homapoojai : திருக்கடையூர் கோயிலில் கோலாகலமாக நடந்த, இளையராஜாவின் ஆயுள் விருத்தி ஹோமபூஜை.. Fans who fell at the feet of composer Ilayaraja and received blessings in Thirukadaiyur Temple Thanjavur Ilayaraja Aayul Viruthi Homapoojai : திருக்கடையூர் கோயிலில் கோலாகலமாக நடந்த, இளையராஜாவின் ஆயுள் விருத்தி ஹோமபூஜை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/31/34ec4eaa066a8b79f93357bc9fa023c0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருக்கடையூர் கோயிலில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆயுள் விருத்தி ஹோமபூஜை விழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த தலமாதலால், இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. மேலும், இத்தலத்தில் அபிராமி அந்தாதி அருளிய அபிராமி பட்டருக்காக அபிராமி அம்மன் அமாவாசையை பௌர்ணமி ஆகிய நிகழ்வும் நடந்துள்ளது.
இக்கோயிலில் 60, 70, 75, 80, 90, 100 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் முறையே மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணா அபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு இன்று மாலை 80 வயதை அடைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? - எடுத்துரைத்த பிரதமர்
தொடர்ந்து, மங்கள வாத்தியம் இசைக்க கோவிலுக்குள் சிவாச்சாரியார்கள் அழைத்துச் சென்றனர். கோயில் கொடிமரத்தின் அருகே இளையராஜா கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தார். அதனை தொடர்ந்து நூற்றுக்கால் மண்டபத்தில் 84 கலசங்கள் மற்றும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, இளையராஜாவுக்கு சதாபிஷேக முதல் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 8 மணிக்குள் இரண்டாம் கால பூஜைகள் நடைபெறுகின்றன.
அமைச்சர் பதவியா..? தலைமைக்கு தர்மசங்கடம் அளிக்க வேண்டாம்..! உதயநிதி அதிரடி அறிக்கை..!
இந்நிகழ்ச்சியில், இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பூஜைகளை ராமலிங்க குருக்கள் தலைமையிலான 21 சிவாச்சாரியார்கள் செய்து வைக்கின்றனர்.
முன்னதாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவை கண்ட அவரது ரசிகர்கள் அவரைக் கண்டு மகிழ்ச்சி பொங்க அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். மேலும் இளையராஜா வருகை புரிந்ததை அறிந்து நாளை அவரது ரசிகர்கள் அங்கு அதிக அளவு கூடுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், நாளை அதை பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்வதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)