மேலும் அறிய

தனியாருக்கு தாரை வார்க்காதீர்கள்... தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம்: எதற்காக?

போக்குவரத்து கழகங்களில் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சாவூர்: மினி பேருந்துகள், மின்சார பேருந்துகள், பணிமனைகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஏஐடியுசி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

மத்திய அரசின் தனியார் மயம் மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருவதை கண்டித்தும், போக்குவரத்து கழகங்களில் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பாக இன்று மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் போக்குவரத்து மத்திய சங்கத் தலைவர் என். சேகர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், கௌரவத் தலைவர் கே. சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியூசி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.சந்திரகுமார்   துவக்கி வைத்து உரையாற்றினார். போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் நகர்ப்புற வழித்தடங்களில் மினி பேருந்துகளுக்கு தாராளமாக அனுமதி அளித்தன் விளைவாக கழகங்களின் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக வாங்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகளையும்,  பேருந்துகளை பராமரிப்பதற்காக தண்டையார் பேட்டை, வியாசர்பாடி உட்பட நான்கு பணிமனைகளையும் தனியாருக்கு கொடுத்துள்ளது. தற்போது தொலைதூர வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் தாராளமாக இயக்கலாம் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.  தனியார் முதலாளிகளுக்கு ஆதரவான இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களே மினி பேருந்துகளையும், மின்சார பேருந்துகளையும் ஏற்று நடத்த வேண்டும். போக்குவரத்து கழகங்களில் தனியார் மய நடவடிக்கைகள் முற்றிலும் கைவிட வேண்டும்,  நடத்துனர், ஓட்டுனர்,தொழில் நுட்ப பணியாளர், அலுவலகப் பணியாளர், பாதுகாவலர், உணவகம் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 35 ஆயிரம் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும், நிரந்தரப் பணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் தேர்வு வைத்து தேர்ச்சி பெற்று காத்திருக்கும் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும்.

1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களை தற்போது நடைமுறையில் உள்ள டிரஸ்ட் கழக பென்ஷன் திட்டத்தில் இணைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும், கடந்த 2024 ஆகஸ்ட் முதல் 20 25 டிசம்பர் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை விடுப்பு தொகை உள்ளிட்ட ஓய்வு கால பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகி எஸ்.ராமசாமி, ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் டி.சந்திரன்,என்.ஆர். செல்வராஜ், என்.ராஜேஷ் கண்ணன்,  ஆர்.ரங்கதுரை, டி.செந்தில் ஓய்வு பெற்ற சங்க நிர்வாகிகள் டி.கஸ்தூரி, அ.இருதயராஜ், எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் சங்க பொருளாளர் சி.ராஜமன்னன் நன்றி கூறினார்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget