மேலும் அறிய

நிசம்பசூதனி அம்மன் பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிந்து கொள்வோம்

எதிரிகள் விஜயாலய சோழனை எதிர்த்து நேரடியாக போரிட முடியாததால், சில துஷ்ட சக்திகள் மூலம் சோழனுக்கு சில மன உளைச்சல்களை ஏற்படுத்தியதால் போரின் போது சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர்: சோழர்களின் போர் தெய்வம்... அட ஆமாங்க உண்மைதான். அந்த தெய்வம் எது என்று உங்களுக்கு தெரியுமா? சோழர்களின் போர்களும், வெற்றிகளும் அனைவரும் அறிந்தது. ஆனால்  சோழர்களின் போர் தெய்வம் நிசம்பசூதனி அம்மன் பற்றி தெரியுங்களா? தெரிந்து கொள்வோம். வாங்க.

சோழ மன்னர்களின் வெற்றி தெய்வமாக வடபத்ரகாளி (எ) நிசம்பசூதனி அம்மன் கோயில் இருந்துள்ளது. திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளின் மூலம் தஞ்சை நகரில் சோழர் ஆட்சி மலரும்போதே நிசும்பசூதனி தேவி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது தெரிய வருகிறது.

சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசராக உறையூரில் பதவி ஏற்றார். இவரே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியம் போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினார்.

இந்த சமயத்தில் எதிரிகள் விஜயாலய சோழனை எதிர்த்து நேரடியாக போரிட முடியாததால், சில துஷ்ட சக்திகள் மூலம் சோழனுக்கு சில மன உளைச்சல்களை ஏற்படுத்தியதால் போரின் போது சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தடைகள் நீங்க வேண்டும். போரில் வெற்றி பெற வேண்டும் என்பதால் மன்னர் தன்னுடைய ஆச்சாரியார்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது சில துஷ்ட சக்திகள் மூலம் எதிரிகள் இதுபோன்ற செயலை செய்துள்ளனர் என்பதை அறிந்து கொண்ட ஆச்சாரியார்கள் இதனை சரி செய்ய நிசும்பன், சும்பன் ஆகிய அரக்கர்களை கொன்ற,  நிசும்பவதம் நிசும்பசூதனி அம்மன் பற்றி மன்னருக்கு விளக்கி உள்ளனர். ஆச்சாரியார்களின் கூற்றை அறிந்து மன்னர் நிசும்பசூதனி அம்மனை வழிபட்டுள்ளார்

இதற்கு பின்புதான் மன்னருக்கு போரின் போது ஏற்பட்ட மன கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி உள்ளது. பின்னர் அசாத்திய வெற்றி மிக சுலபமாக பெற்றார் மன்னார். இதிலிருந்து மன்னரின் வெற்றி தெய்வமாக நிசும்பசூதனி மாறி உள்ளார். இதனால்தான் மன்னரின் இஷ்ட தெய்வமாகவும் நிசும்பசூதனி மாறினார். அந்தளவிற்கு நிசும்ப சூதனி பெருமையை சோழ மன்னர்கள் உணர்ந்து இருந்தனர்.

பின்பு அம்மனுக்கு தொடர்ந்து வழிபாடு செய்து அம்மனிடம் அருளை பெற்று போருக்கு சென்றுள்ளனர் சோழ மன்னர்கள். சோழ மன்னர்களின் தொடர்ந்து அதன் பின் வந்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் அம்மனை தொடர்ந்து வெற்றி தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இதற்கு பின்னர் 250 வருடம் தஞ்சாவூர் சோழர்களின் தலைநகராக விளங்கி உள்ளது.

இந்த கோயில் தற்போது அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, நவமி ஆகிய நான்கு நாட்களும் அம்மனுக்கு விஷேசமான நாட்களாகும், வருடத்தில் தை மாதம், அம்மனுக்கு பால் குடம், காவடி, திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்த அம்மனை அம்மனை 9 வாரம் வந்து வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும். சோழ தேச மன்னர்களின் வெற்றி தெய்வமாக இருந்ததால், சோழதேச மக்களுக்கும் நிசம்பசூதனி அம்மன் வெற்றி தெய்வமாக இன்றும் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget