''இலவசமா வேண்டாங்க.. நாங்க விழிப்புணர்வு நாடகம் நடத்துறோம்’’ - பெருந்தன்மையால் நெகிழ வைத்த நாடக கலைஞர்கள்
மயிலாடுதுறையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த இசை மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு வாழும்கலை அமைப்பினர் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இலவசமாக பெற மனமின்றி விழிப்புணர்வு நாடகம் நடத்தி நன்றிக்கடன் செலுத்திய நாடகக் கலைஞர்கள்.
மயிலாடுதுறையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த இசை மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு வாழும்கலை அமைப்பினர் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். இலவசமாக பெற மனமின்றி விழிப்புணர்வு நாடகம் நடத்தி நன்றிக்கடன் செலுத்திய நாடகக் கலைஞர்கள்.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று பரவி மனிதர்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதன் காரணமாக, பல்வேறு விதமான தொழில்கள் பாதிக்கப்பட்டு அத்தொழிலில் செய்துவந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு பல தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், பலதரப்பட்ட அமைப்புகளும் உதவிகரம் நீட்டிகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இருந்தோம் நாகை, மயிலாடுதுறை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 31 ஆயிரத்து 555 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 25 ஆயிரத்து 954 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று ஒரேநாளில் மட்டும் 516 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 828 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் 13 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 378 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 5 ஆயிரத்து 223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில் மயிலாடுதுறையில் கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதரம் இழந்துள்ள இசை மற்றும் நாடகக் கலைஞர்கள் 100 பேரின் குடும்பத்தினருக்கு, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை சங்கர வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாழும் கலை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரம்மச்சாரி ஸ்ரீதேஜ் நிவாரணப் பொருள்களை வழங்கினார். இந்த நிவாரணப் பொருட்களை இலவசமாக பெற்றுக்கொள்ள மனமில்லாத நாடகக் கலைஞர்கள் வாழும்கலை அமைப்பினருக்கு நன்றி செலுத்தும் விதமாக கொரோனா விழிப்புணர்வு நாடகத்தை கொரோனா, மற்றும் கடவுள் வேடங்கள் அணிந்து நடித்து காண்பித்து பெற்று சென்றனர்.
''சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?'' - காரணங்களை விளக்கும் சூழலியல் செயற்பாட்டாளர்கள்!