மேலும் அறிய

தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு: முன்னாள் அமைச்சர் மோகன் குற்றச்சாட்டு

தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் குற்றம் சாட்டி பேசினார்.

தஞ்சாவூர்: தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் குற்றம் சாட்டி பேசினார்.

தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சாரபில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர்கள் திருஞானசம்பந்தம், ராம்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், முன்னாள் எம்.பி. பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர், ரத்தினசமி, ராமநாதன், தவமணி, ராமச்சந்திரன், இளமதிசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு..க அமைப்பு செயலாளருமான மோகன் கலந்து கொண்டு பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதியை மீறி மின்கட்டணத்தை உயர்த்தினர். அதேபோல் பால் விலையை உயர்த்தினர். மேலும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தெரிவித்தனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறினார்கள். இதை எதையும் நிறைவேற்றவில்லை. விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. மின்கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் பால் 40 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.

தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினமும் கொலை, கொள்ளை அரங்கேறி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருந்தது. 11 மருத்துவக்கல்லூரி, 6 சட்டக்கல்லூரி, 25-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன.

காவிரி பிரச்சினையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி நமது உரிமையை நிலைநாட்டினார். எடப்பாடி பழனிசாமி, காவிரியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத்தலைவர் பாலை.ரவி, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், சாமிவேல், கலியமூர்த்தி, இளங்கோவன், சூரியநாராயணன், சோழபுரம் அறிவழகன், அசோக்குமார், மதியழகன், மலை.முருகேசன், முருகானந்தம், துரைமாணிக்கம், அருணாசலம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்லூரி பகுதி முன்னாள் செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார். அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget