மேலும் அறிய
Advertisement
ராகுல்காந்தி பதவி தகுதி நீக்கம்; நாகையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது
திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை திருகண்ணங்குடி ரயில்வே கேட் அருகே மறித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து நாகை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமையில் கீழ்வேளூர் அருகே அத்திபுலியூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மாவட்டத் தலைவர் அமுலு ராஜா உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை திருகண்ணங்குடி ரயில்வே கேட் அருகே மறித்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அந்தனபேட்டையில் சரக்கு ரயிலை மறித்தவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். மேலும் வெளிப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 50 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
மதுரை
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion