மேலும் அறிய

தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 700 மதுபாட்டில்கள், 2000 காலி மதுபாட்டில்கள் பறிமுதல்

ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் போலி மதுபான ஆலை இயங்கிவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் அந்த இடத்துக்குள் அதிரடியாக நுழைந்து, தப்பிக்க முயன்ற 6 பேரை மடக்கிப் பிடித்தனர்

தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பகுதிகளில் போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுவதாக,  கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிபபாளர் ரவளிப்பிரியா உத்தரவின்பேரில், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், சோதனை நடத்தினர். அப்போது, ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியில் போலி மதுபான ஆலை இயங்கிவருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தனிப்படை போலீஸார் அந்த இடத்துக்குள் அதிரடியாக நுழைந்து, தப்பிக்க முயன்ற 6 பேரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சம்பவ இடத்தை வல்லம் டிஎஸ்பி பிருந்தா நேரில் பார்வையிட்டு, தமிழ்ப் பல்கலைக் கழக போலீஸார், 6 பேரையும் கைது செய்யவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 700 மதுபாட்டில்கள், 2000 காலி மதுபாட்டில்கள் பறிமுதல்

இதுகுறித்து போலீஸார்  நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் பொட்டுவாச்சாடி வடக்கு தெருவைச் சேர்ந்த மெல்வின் சகாயராஜ் (41) என்பவர், துலுக்கம்பட்டியில் குமரேசன் என்பவருக்குச் சொந்தமான மேற்படி இடத்தை, மாத வாடகையாக ரூ.5 ஆயிரம் என வாய்மொழியாக ஒப்புக்கொண்டு வாடகைக்கு எடுத்து கடந்த 4 மாதங்களாக அங்கே போலி மதுபான ஆலை நடத்தி வந்துள்ளது தெரிய வந்தது. அதற்காக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபானம் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களை வாங்கி வந்து மதுபானங்கள் தயாரித்து, போலியாக நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டி வெளியே கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்றுவந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 700 மதுபாட்டில்கள், 2000 காலி மதுபாட்டில்கள் பறிமுதல்

மேலும், இப்போலி மதுபான ஆலையில் தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்த சே.அறிவழகன் (30), மாரியம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன் (33), திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையைச் சேர்ந்த செ.முத்துக்குமார் (29), புதுச்சேரி மாநிலம் காரைக்காலை நேரு நகரைச் சேர்ந்த பாபு (எ) விஜயகுமார் (42), காரைக்கால் அருகேயுள்ள கோவில்பத்து திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியப்பன் (38) ஆகியோர் வேலைபார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலி மதுபான ஆலையில் இருந்து 700 மதுபாட்டில்கள், 2,000 காலி மதுபாட்டில்கள், 2 மூட்டைகளில் மதுபாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் கேன்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, போலி மதுபான ஆலைக்கு சீல் வைத்தனர்.

தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு - 700 மதுபாட்டில்கள், 2000 காலி மதுபாட்டில்கள் பறிமுதல்

போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் பாபு, காரைக்காலில் சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட  ராமுவின் அக கா மகன் ஆவார். பாபு மீது ஒரு கொலை வழக்கும், பல்வேறு மதுகடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. திருக்கண்ணமங்கை முத்துக்குமார் மீது  மூன்று கொலை வழக்குகளும், பெல்வின் சகாயராஜ் மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், மூன்று சிலை திருட்டு வழக்குகளும், அறிவழகன் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளது என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget