அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் மோடி பதற்றத்துடன் கொண்டாட என்ன காரணம்? - அழகிரி கேள்வி
மகாத்மா காந்தி தான் இந்தியாவில் ராமருக்கு புகழ் சேர்த்தவர்.ராகுல் காந்தியை தடுத்தவர்கள் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தஞ்சாவூர்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் மோடி பதற்றத்துடன் கொண்டாட வேண்டிய காரணம் என்று என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் தத்துவாஞ்சேரி முன்னாள் எம்எல்ஏ ராமாமிர்த தொண்டைமான் சிலையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ராமர் கோவிலில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டிய விழா. பிரதமர் மோடியா இந்த விழாவை பதற்றத்துடன் நிகழ்ந்து உள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் 3200 ராமர் கோவில்கள் உள்ளது. அதில் மோடி கட்டிய ராமர் கோவில் 3201 என்பதை தவிர இந்தியாவில் எந்த அரசியல் மாற்றமும் இருக்காது.
எந்த ஊரில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தாலும், அன்றைய தினம் அந்த ஊர் சிறப்பாக தான் இருக்கும். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யாரும் எதிராக இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக, மிகவும் அமைதியாக கொண்டாட வேண்டியதை, பிரதமர் மோடி இந்தளவுக்கு பதற்றத்துடன் கொண்டாட வேண்டிய காரணம் என்ன? அவரை யார் தரையில் படுக்க கூறியது.
அயோத்தியில் ராமருக்கு கோவில் வேண்டாம் என இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள் யாரும் சொல்லவில்லை. பா.ஜ.க.தான் பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதாக சொன்னீர்கள். ஆனால் காங்கிரஸ் தரப்பில் அயோத்தியில் எங்கே வேண்டும் என்றாலும் ராமர் கோவில் கட்டலாம் என்று சொன்னோம். அதில் என்ன தவறு இருக்கிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவில்லை. மூன்று கிலோ மீட்டர்க்கு அப்பால் கட்டி இந்திய மக்களை திறமையாக நம்ப வைத்துள்ளார்கள். 500 ஆண்டு கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள் இந்துகளுக்கு எப்பொழுது அவமானம் ஏற்பட்டுள்ளது.
300 ஆண்டுகளுக்கு மேல் மொகலாயர்கள், 300 ஆண்டுகள் ஐரோப்பியர்கள், அதற்கு முன்னதாக பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் இந்தியாவை ஆண்டார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்துக்களை காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,இல்லை. இந்துக்கள் தாங்களாவே வளர்த்து கொண்டார்கள்,
அயோத்தியில் கட்டுமான பணி முடிவதற்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. மோடி எப்பொழுதும் அப்படி தான் செய்வார். ராமர் கோவில் என்றால் கும்பாபிஷேகத்திற்கான பட்டாபிஷேகம் சிலை இல்லை. ராமர் சீதையுடன் இருக்கும் சிலை இருக்க வேண்டும் அதுவும் இல்லை. இரண்டும் இல்லாமல் ஒரு குழந்தையின் சிலையை வைத்துள்ளார்கள். ஏதோ மோடி ஜாதகம் பார்த்து செய்துள்ளார். இது அவருக்காக செய்து கொண்டதை தவிர, ராமருக்காகவும், மக்களுக்காகவும் செய்தது அல்ல.
ராகுல் காந்தி தாக்கப்பட்டது மிகப்பெரிய சமூக விரோத செயல். காங்கிரஸ் கட்சி கோவிலுக்கு செல்லாத கட்சி இல்லை. மகாத்மா காந்தி தான் இந்தியாவில் ராமருக்கு புகழ் சேர்த்தவர். ராகுல் காந்தியை தடுத்தவர்கள் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அங்கு பா.ஜ.க.,வின் அரசு இருப்பதால் முடக்கி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், மாவட்ட தலைவர் டி.ஆர். லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.