கல்லூரி மாணவர்களே செம சூப்பர் சான்ஸ் உங்களுக்கு: முழு விபரமும் உள்ளே!!!
இதில் திட்ட இணை, பயிற்சியாளர், தொழில்நுட்ப வல்லுநர் (Project Associate, Intern, Technician) உட்பட மொத்தம் 22 காலியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தஞ்சாவூர்: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கு. கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். என்ன ரெடியாகிட்டீங்களா?
அண்ணா பல்கலைக்கழகம் 2025-ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் திட்ட இணை, பயிற்சியாளர், தொழில்நுட்ப வல்லுநர் (Project Associate, Intern, Technician) உட்பட மொத்தம் 22 காலியிடங்கள் உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.12.2025-க்குள் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Associate I, Project Assistant (PG Intern), Project Assistant (UG Intern), Project Technician, Project Assistant (Admin) என மொத்தம் 22 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள PDF விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் நிரப்பி வரும் 31.12.2025க்குள் அஞ்சல் மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுப்ப வேண்டும்.
இந்த வேலைகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. M.E/M.Tech/M.Sc முடித்தவர்கள் திட்ட அசோசியேட்1 Project Associate Iக்கு விண்ணப்பிக்கலாம். UG/PG படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களும் Internship பணிக்கான Project Assistant பதவிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. டிப்ளமோ அல்லது எந்த ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் Project Technician பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் நிர்வாக அனுபவம் கொண்டவர்கள் Project Assistant (Admin) பதவிக்குத் தகுதி பெறுவர்.
தேர்வு செயல்முறை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், கூட்டுப் பொருட்கள் மையம் (CCM), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025. (The Director, Centre for Composite Materials (CCM), Anna University, Chennai – 600 025.) இதற்கு கூடுதலாக, விண்ணப்பத்தின் ஸ்கேன் நகலை ccmdirector@annauniv.edu என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப செயல்முறை கடந்த 10.12.2025 அன்று தொடங்கி உள்ளது. வரும் 31.12.2025 மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. சம்பள விவரங்களில் Project Associate Iக்கு ரூ.35,000 வரை மற்றும் Intern பணிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,750 வரை வழங்கப்படும். Project Technicianக்கு ரூ.20,000 மற்றும் அட்மின் அசிஸ்டென்ட்க்கு ரூ.24,000 வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.





















