Chess Olympiad 2022: பிரதமர் மோடி படம் எங்கே?.....மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்...!
செஸ் ஒலிம்பியாட் விளம்பர விழிப்புணர்வு பேருந்தில் பிரதமர் மோடியின் படம் ஏன் இல்லை என பாஜகவினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச அளவில் 44வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற ஜுலை 28ம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்டு 10ம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
மேலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ், நம்ம பெருமை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மயிலாடுதுறையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 44 வது செஸ் ஒலிம்பியாட் விளம்பர மற்றும் விழிப்புணர்வு படங்கள் ஒட்டப்பட்ட பேருந்தினை மாவட்ட ஆட்சியர் லலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது, அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சியினர் செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேருந்தில் பிரதமர் மோடியின் படம் வைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச செஸ் ஒலிம்யியாட் போட்டியானது இந்தியா சார்பில் தமிழகத்தில் நடைபெறும் போது பிரதமர் மோடியின் படத்தை விளம்பர பேருந்தில் வைக்காதது ஏன் என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Balamani Amma Google Doodle: உணர்வுகளைக் கொடுத்த எழுத்து! கூகுள் கொண்டாடும் கவிஞர் பாலமணி அம்மா!
உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து சமாதானப்படுத்தினார். தொடர்ந்து பாரத மாதா கி ஜே, பாரதிய ஜனதா வாழ்க என வாழ்த்து முழக்கங்களை எழுப்பி கலைந்தனர். பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்