மேலும் அறிய

தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ

முன்பு மாதிரி மும்பையில் இருந்து ஏழு பேர் பத்து பேர் எல்லாம் அணியில் கிடையாது.இப்போது எல்லா மாநிலத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்திய அணியில் விளையாடுகிறார்கள்

ஐ பி எல் லின் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார். சிஇஓ பேட்டி. 

திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்  சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  குஜராத் டைட்டன்ஸ் அணியில் பங்கு பெற்று ஐபிஎல் லில் விளையாடிய வீரரும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவருமான சாய் கிஷோர் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, இயற்கையாகவே எனக்கு பெரிதாக கிரிக்கெட் விளையாட தெரியாது ரஞ்சித் டிராபியில் விளையாடும் போது கூட இதைதான் நான் உணர்ந்தேன். இருப்பினும் என்னை பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பது ஒரு விஷயமே இல்லை. தொடர்ந்து நாம் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக பயிற்சியை பெரிதாக தவிர்க்காமல் இருந்தாலே போதுமானது. பயிற்சியை பொறுத்தவரை நான் அதிகமாக அதை தவிர்த்தது கிடையாது. பயிற்சிக்கு சரியாக நான் சென்றுவிடுவேன். அதேபோன்று எனது சிறுவயதில் எனக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்த கோச்சர் ஜானகிராமனுக்கு நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். எனவே நீங்களும் வெற்றி தோல்வியை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் பயிற்சியை தவிர்க்காமல் சரியாக பயிற்சி பெற்று ஐபிஎல் தமிழ்நாடு ரஞ்சித் டிராபி இந்திய அணி என அனைத்திலும் இடம்பெற்று விளையாட வேண்டும் என்பது எனது ஆசை.அதற்கு உங்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார். 


தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ

நிகழ்ச்சியின் முடிவில் செய்தி யாளர்களை சந்தித்த சி.இ.ஓ காசி விஸ்வநாதன், "திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் 25 வது வெள்ளி விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் நடத்துவது என்பது மிகவும் சிரமமானது.கடந்த 20 வருடங்களாக தான் பிசிசிஐ-க்கு பணம் வருகிறது அதை கொஞ்சம் கொஞ்சம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள். திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனுக்கு சரியான மைதானம் இல்லை.இன்று காலை கூட செயலாளர் பசுபதி சென்ட்ரல் யுனிவர்சிட்டியில் உள்ள மைதானத்தை காட்டினார் அதனை லீசுக்கு எடுப்பது குறித்து தொடர்ந்து பரிசிலீக்கப்படும். தமிழ்நாட்டு வீரர்கள் குறைவாக இந்திய அணியில்  ஆடுகிறார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. டெஸ்ட் மேட்சில் அஸ்வின் இருக்கிறார். விஜய் இருக்கிறார்.- ஒன் டே மேட்சில் தினேஷ் கார்த்திக் அஸ்வின் இருக்கிறார்கள். அடுத்து சாய் கிஷோர் ஆடவிருக்கிறார். நிறைய தமிழக வீரர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வாஷிங்டன் சுந்தரம் விஜய் சங்கர் ஆகியோர் காயம்பட்டுள்ளார்கள்.


தமிழ்நாட்டு வீரர்கள் குறைவான எண்ணிக்கையில் ஆடுகிறார்கள் என்று சொல்ல முடியாது - சென்னை கிங்ஸ் சிஇஓ

முன்பு மாதிரி மும்பையில் இருந்து ஏழு பேர் பத்து பேர் எல்லாம் அணியில் கிடையாது. இப்போது எல்லா மாநிலத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்திய அணியில் விளையாடுகிறார்கள். டி என் பி எல் இல் இருந்து 13 பேர் ஐ.பி.எல்-இல் சென்று விளையாடுகிறார்கள்.  அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திரன் தோனி விளையாடுவார். அதேபோன்று அணியின் கேப்டனாகவும் நீடிப்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு கோப்பைகளை ஐபிஎல் வீரர் சாய் கிஷோர் வழங்கினார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
Embed widget