மேலும் அறிய

குப்பைக்கிடங்கு ஊழல் விவகாரத்தில் தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையர் மீது வழக்குப்பதிவு

பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியின் குப்பை கிடங்கு ஊழல் தொடர்பாக முன்னாள் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பல நாட்களாக இதுகுறித்த விவகாரம்தான் தஞ்சாவூரின் டாக் ஆப் சிட்டியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு சேரும் குப்பைகளை தரம் பிரிக்க, கடந்த 2018 -ம் ஆண்டு பயோமைனிங் முறையில், 2.30 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது.

அதன் பின், புதிய நிறுவனத்துக்கு 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும் 5,000 கனமீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, ரூ.10.60 கோடி பில் தொகையை எடுத்துக் கொண்டுள்ளார். அதற்கு, 8,328 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளனர். இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 20 -ம் தேதி  லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக்தில் இருந்து, குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து, தேவையான ஆணவங்களை எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியானது. இது தஞ்சாவூர் நகர் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் க.சரவணக்குமார், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்தக்காரர் மணிசேகர் ஆகிய நான்கு பேர் மீதும் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த குப்பைக்கிடங்கு ஊழல்தான் தஞ்சாவூரின் டாக் ஆப் சிட்டியாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget