மேலும் அறிய
கோடை விடுமுறை வழங்கிய அரசு - நாகையில் அங்கன்வாடி ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
தமிழக அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு நாளை 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 15 நாள் கோடை விடுமுறை அளித்துள்ளது.
கோடை விடுமுறை வழங்கியதையொட்டி நாகையில் அங்கன்வாடி ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.
குழந்தைகளின் நலன் கருதி கோடை விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி உழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் 26 ம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பகல் இரவாக 2 நாட்கள் நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும், சிலிண்டர் மாணியத்தை முழுமையாக வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியின்படி 2 நாள்களுக்கு பிறகு காத்திருப்பு போராட்டாம் வாபஸ் பெறப்பட்டது.
இதனையெடுத்து தமிழக அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு நாளை 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 15 நாள் கோடை விடுமுறை அளித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நாகையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மாவட்டத் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கீழ்வேளூர், நாகை, கீழையூர், வேதாரண்யம், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றியங்களைச் சேர்ந்ந அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பழனியம்மாள் கூறும் போது, “எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வழியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டோம். குறிப்பாக தொடர் காத்திருப்பு போராட்டத்தின் வெற்றியாக எங்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கும், இதை சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசிய சிபிஎம் எம்எல்ஏக்கள் நாகை மாலி, சின்னத்துறை ஆகியோர்களுக்கும் போராட்டத்தில் உறுதுணையாக இருந்த சிஐடியூ அமைப்பு நிர்வாகிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். மேலும் அங்கன்வாடி ஊழியா்களின் காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion