மேலும் அறிய

மணிப்பூரில் இருப்பது தஞ்சாவூரில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது - ஆளுநர் இல.கணேசன்

’’மணிப்பூர் மாநில மக்கள் உழைப்பாளிகள். மிகவும் தொன்மையானவர்கள் குறிப்பாக கலையின் மீது  மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள்’’

நான் உளமார செய்த பிரார்த்தனை  முருகன் அருளால் நிறைவேறியிருக்கிறது

மணிப்பூர் மாநில மக்கள் கலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் எனக்கு தஞ்சையில் இருப்பது போலவே தோன்றுகிறது

மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன் பேட்டி

கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் மணிப்பூர் கவர்னராக பொறுப்பேற்றுள்ள  தஞ்சையை சேர்ந்த இல.கணேசன் தன் குடும்பத்துடன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று மனமுருக சாமி தரிசனம் செய்தார்.முன்னதாக போலீசார் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதேபோல் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 பின்னர்  இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்,

நான் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் சுவாமிமலை சாமிநாதசாமி எங்களது குலதெய்வம். எத்தனை முறை சுவாமிமலை கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்துள்ளேன் என்பதை என்னால் சொல்ல இயலாது. எனக்காக உளமாற பிரார்த்தனை செய்ய ஒரு இடம் இருக்குமானால் அது சுவாமிமலை. எல்லா  மனிதரைப் போல எனக்கும் விருப்பு வெறுப்புகள் உண்டு.  எனவே நான் உளமார செய்த பிரார்த்தனைகளுக்கு  முருகன் அருளால் நிறைவேறியிருக்கிறது. அதற்கு நன்றிக்கடன் தெரிவிக்க கோவிலுக்கு வந்துள்ளேன். 

நூற்றுக்கணக்கான முறை தரிசித்து மகிழ்ந்த தஞ்சை பெரிய கோவில் அதனை மீண்டும் பார்க்க  வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயமாக வருவேன். என்னுடைய சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த மகாராஜபுரம் தான் அங்கு என்னுடைய கிராம தேவதை உள்ளார். அவரை தரிசனம் செய்ய உள்ளேன். நேற்று சென்னையில் துணைத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி இருந்தது. அதில் பங்கேற்பதற்காக வந்தேன் தற்போது தொடர்ந்து சுவாமி மலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன்.

மணிப்பூர் இயற்கையிலேயே அழகான இடம். பாரத நாட்டின் சுவிட்சர்லாந்து என்று அதனை அழைக்கிறார்கள். அருமையான இடம். பிரச்சினைகள் எதுவும் இல்லை. பக்கத்தில் பர்மா தான் எல்லையாக இருக்கிறது. பர்மா நட்பு நாடாக இருப்பதால், எந்தவிதமான பிரச்சனையில் இல்லை. அம்மாநில மக்கள் உழைப்பாளிகள். மிகவும் தொன்மையானவர்கள் குறிப்பாக கலையின் மீது  மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். அதனால் எனக்கு தஞ்சாவூரில் இருப்பது போலவே தோன்றுகிறது. அதனால் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து பந்தநல்லூர் அருகே உள்ள மகாராஜாபுரத்தில் உள்ள கோயிலுக்கு சாமி  தரிசனம் செய்ய சென்று விட்டார். தரிசனத்தின் போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீஸ் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் உடனிருந்தனர். ஆளுநர் வருகையையொட்டி சுவாமிமலை கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Embed widget