மேலும் அறிய

தஞ்சையில் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து இமாமை தாக்கிய ராணுவ வீரர் கைது

ராஜா ராணுவ வீரர் என்பதால் முறைப்படி ராணுவ ரெஜிமெண்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் ராஜாவை கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.

தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டு இமாமை தாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே பாஸ்கரபுரத்தில் அல் அன்சர்  பள்ளிவாசலில் உள்ளது. இங்கு பள்ளிவாசல் ஒலிப்பெருக்கியில் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது  பள்ளிவாசலுக்குள் செருப்புடன் நுழைந்து ஒரு நபர் அங்கு இருந்த ஊழியரை தாக்கி உள்ளார்.

பின்னர் அந்த நபர் தனது செல்போனில் ஹரே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீராம் என்ற பாடலை ஒலிக்க விட்டுள்ளார். மேலும் பள்ளிவாசல் மைக்கில்  தன்  செல்போனை வைத்து ஒலிபரப்புமாறு பிரச்சனை செய்துள்ளார். இதனால் பள்ளிவாசலில் இருந்தவர்களுக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளிவாசல் இமாம் ஜெயினுலாபுதீனை, அந்த நபர் தாக்கியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உருவானது. ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்தனர்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வந்த போலீசாரிடம் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த நபரை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். இதையடுத்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரஹ்மான் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ராஜா (35) என்பதும்,  அசாமில் ராணுவத்தில் பணிபுரிவதும், விடுப்பில் வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பியதாக தெரிய வருகிறது.


தஞ்சையில் பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து இமாமை தாக்கிய ராணுவ வீரர் கைது

இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிவாசலுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்ட ராஜா மீது மருத்துவக்கல்லூரி போலீசில் பள்ளிவாசல் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் ராஜாவை விசாரணைக்கு அழைக்க சென்ற போது அவர் வீட்டில் இல்லை.

பின்னர் தஞ்சை டவுன் டிஎஸ்பி ராஜா விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து ராணுவ வீரர் ராஜா மீது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜா ராணுவ வீரர் என்பதால் முறைப்படி ராணுவ ரெஜிமெண்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் ராஜாவை கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மருத்துவக்கல்லூரி, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தகவல் அறிந்து பள்ளிவாசல் முன்பு குவிந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Embed widget