மேலும் அறிய
Advertisement
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மாற்றம் வரும் - அண்ணாமலை நம்பிக்கை
வேளாங்கண்ணி தேவாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாதாவை தரிசனம் செய்தார்.
நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வேதாரண்யத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி வரை தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்த அண்ணாமலை அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கனமழை மற்றும் புயல் அறிவிப்பு காரணமாக வருகின்ற 5 ஆம் தேதி வரை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ஆம் தேதியில் இருந்து நடை பயணத்தை கடலூரில் இருந்து துவங்க உள்ளேன்.
சென்னை மழையில் கீழ்நிலை ஊழியர்கள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கின்றனர். இரவு நேரத்தில் பிரச்னை என்றாலும் மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் பணியாற்றுகின்றனர். கனமழைக்கு தேங்கும் தண்ணீர். வருட வருடம் இதே நிலை தான். தமிழக மக்கள் கேட்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பால் தனியார் கம்பெனிகள் சென்னைக்கு வர யோசித்து ஹைதராபாத் செல்கின்றனர். மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் இதை நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார்.
திமுக ஆட்சிக்கு 30 மாத காலம் இருக்கிறது. அதற்குள் மழைநீர் தேங்கும் பிரச்னையை முழுவதுமாக சரி செய்ய மாற்றி யோசிக்க வேண்டும். மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல்வாதிகள் வேட்டி போர்வை கொடுப்பது நன்றாகவா இருக்கிறது என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, ஊழல் இல்லாத தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
ஒவ்வொரு மழையிலும் சென்னை நகரம் தத்தளிப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மீனவரும் படகு வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் அவர்களது வாழ்வாதாரம் பெருக வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார். மீனவர்களுக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கியது தனி அமைச்சர் என மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது.
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க தமிழக முதல்வர் மட்டுமல்ல நானும் கடிதம் எழுதி வருகிறேன். இலங்கை வசம் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு மத்திய அரசின் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கச்சத்தீவை கொடுத்த பிறகு சர்வதேச எல்லை மாறியுள்ளது. மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த கச்சத்தீவை மீட்க வேண்டும் அதற்கு பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாக குரல் கொடுக்கிறது. நடக்கும் என நம்பிக்கை இருக்கிறது. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
தெலங்கானா சட்டபேரவை தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருடன் நானும் தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்துள்ளேன். மாற்றம் வரும் அது பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை எனக்குள்ளது என்று கூறினார்.
அப்போது ஏராளமானோர் அண்ணாமலையுடன் இன்று செல்பி எடுத்துக் கொண்டனர் வேளாங்கண்ணி வந்த புதுமண தம்பதியினர் மாதாவின் சுரூபத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வழங்கி அவரிடம் ஆசி பெற்றார். பின்னர் வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரியமான கோரக்க சித்தர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டார். அங்கு தியான கூடத்தில் தியானத்தில் ஈடுபட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion