மேலும் அறிய

100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பாரம்பரியம்... திருமுறை நூல்களுக்கு வீடுகளில் ஆரத்தி எடுத்து மரியாதை

கொல்லங்கரை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருநாளில் தேவாரம், திருவாசக நுால்களை பெரியவர்கள், சிறுவர்களுக்கு கற்பிக்கும் நிகழ்வு தொடங்குவது வழக்கம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கொல்லங்கரை கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறை நுால்களுக்கு வீடுகள் தோறும் மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.  

தஞ்சாவூர் மாவட்டம் கொல்லங்கரை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருநாளில் தேவாரம், திருவாசக நுால்களை பெரியவர்கள், சிறுவர்களுக்கு கற்பிக்கும் நிகழ்வு தொடங்குவது வழக்கம். பின்னர், மார்கழி மாதம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராமம் முழுவதும், திருமுறை நுால்களை பாடி வீதியுலாவாக வந்தனர்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பாரம்பரியம்... திருமுறை நூல்களுக்கு வீடுகளில் ஆரத்தி எடுத்து மரியாதை

இதையடுத்து தை மாதம் முதல்நாளான பொங்கல் தினத்தில் திருமுறை நுாலையும், திருமுறைகள் பாடியவர்களையும் கெளரவிக்கும் விதமாக, வீடுகள் தோறும் வரவழைத்து அவர்களுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வழங்கி, தீப ஆரத்தி எடுத்தனர்.  

இது குறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், எங்களது கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் முன்பு 30க்கும் மேற்பட்ட திருமுறைகளை பாடும் ஓதுவார்கள் இருந்தனர். நெல்லுப்பட்டு நமச்சிவாய சுவாமிகள் வழிகாட்டுதலில், திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் திருமுறைகளை பாடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர். 

தற்போது, திருமுறைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும். திருமுறை நுால்களை பாதுகாக்க வேண்டும் என கிராம சிறுவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.  அத்துடன், 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருமுறைகளை அனைவரும் கற்று வருகிறோம்.  திருமுறைகளை பாடி வருபவர்களையும், திருமுறை நுால்களை கெளவுரவிக்கும் வகையில், வீடுகள் தோறும் மரியாதை செய்வது இன்றும் தொடர்கிறது.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget