மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் 6063 பேர் தபால் வாக்குப்பதிவு... மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், 6,063 பேர் மட்டுமே தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் என 6,063 பேர் தபாலில் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 40% க்கும் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 6,063 பேர் தபால் மூலம் வாக்குப் பதிவு செய்துள்ளனர். நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை  தொகுதிகளில் வசிக்கும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் ஜனநாயகக் கடமையை எளிதாக ஆற்றும் வகையில் "இல்லம் தேடிச் சென்று தபால் வாக்கு சேகரிக்கும்" திட்டத்தை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது.
 
அதன்படி, கடந்த ஏப்.13, 14, 15 ஆகிய மூன்று தினங்களில், தபால் வாக்களிக்க விண்ணப்பித்த வாக்காளர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கப்பட்டது. இப்பணிகளைச்  மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் மொத்தம் 100 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. 

இதில் திருவிடைமருதூர் தொகுதியில் 498 முதியோர்கள் மற்றும் 187 மாற்றுத்திறனாளிகள்  என மொத்தம் 685 வாக்காளர்களுக்காக 12 குழுக்கள், கும்பகோணம் தொகுதியில் 705 முதியோர்கள் மற்றும் 206 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 911 வாக்காளர்களுக்காக 14 குழுக்கள், பாபநாசம் தொகுதியில் 484 முதியோர்கள் மற்றும் 242 மாற்றுத்திறனாளிகள் என 726 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள் அமைக்கப்பட்டது.

திருவையாறு தொகுதியில் 389 முதியோர்கள் மற்றும் 184 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 573 வாக்காளர்களுக்காக 11 குழுக்கள்,  தஞ்சாவூர் தொகுதியில் 634 முதியோர்கள் மற்றும் 152 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 786 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள், ஒரத்தநாடு  தொகுதியில் 632  முதியோர்கள் மற்றும் 143 மாற்றுத்திறனாளிகள் 775 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள் அமைக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை தொகுதியில் 515 முதியோர்கள் மற்றும் 268 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 783 வாக்காளர்களுக்காக 10 குழுக்கள்,  பேராவூரணி தொகுதியில் 577 முதியோர்கள் மற்றும் 247 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 824 வாக்காளர்களுக்காக 14 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 4,434  முதியோர்கள் மற்றும் 1,629 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6,063 வாக்காளர்கள் இந்த வசதியைப் பெற்று உள்ளனர். 

மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், 6,063 பேர் மட்டுமே தபால் மூலம் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Embed widget