மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 50 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 3,500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றன. இப்பள்ளியில், பிளஸ்-2 மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் 17 வயதான ஸ்ரீமதி என்ற மாணவி தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். 


மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 50 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின

இந்நிலையில் பொறியாளர், மருத்துவர் என சாதிக்கும் கனவுடன் இருந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13 ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், மாணவியின் பெற்றோர் தரப்பில் சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக அவர்கள் சின்னசேலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மாணவி மரணம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 50 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின

மாணவி உயிரிழந்த மறுநாள் 14ம் தேதி மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து, பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முயன்றனர். ஆனால், மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும்,  மாணவியின் மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள், மாணவர் அமைப்பினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 4 நாட்களாக பள்ளி முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து இவர்களின் போராட்டம் நேற்று 5 வது நாளாக தொடர்ந்தது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 50 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின

ஒருகட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி வளாகத்திற்குள் நுழைந்து, பேருந்துகள், மேஜை, நாற்காலி என அனைத்து பொருட்களையும் தீயிட்டு கொளுத்தி பள்ளியை முழுவதுமாக சூறையாடினர். இந்நிலையில், பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று ஒருநாள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 50 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின

அதனைத் தொடர்ந்து  மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கின.  இம்மாவட்டத்தில் 55 மெட்ரிக் பள்ளிகள் ஐந்து சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ள நிலையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கின. மீதமுள்ள 50 சதவீத பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவித்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget