மேலும் அறிய

சோழர்கள் வரலாறு குறித்து அறிந்து கொள்ள 300 கி.மீ., விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

சைக்கிளில் செல்லும் போது சுற்றுச் சூழலுக்கும் கேடு கிடையாது. உடலுக்கும் ஆரோக்கியம்.

சோழர்கள் வரலாறு குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டி 3 நாளில் 300 கி.மீ. செல்லும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் சென்னையை சேர்ந்த குழுவினர் மேற்கொண்டுள்ளனர். 11-வது ஆண்டாக தஞ்சையில் இருந்து அந்த குழுவை சேர்ந்த 60 பேர் தங்களது பயணத்தை தொடங்கினர்.

சென்னையை சேர்ந்த சைக்கிளிங் யோகிஷ் குழுவை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தின்  பாரம்பரிய இடங்களில் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி 11-வது ஆண்டாக நேற்று தஞ்சையில் இருந்து அந்த குழுவை சேர்ந்த 60 பேர் தங்களது பயணத்தை தொடங்கினர். இந்த சைக்கிள் பயணத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பயணமானது தஞ்சையில் இருந்து புறப்பட்டு கடலூர் மாவட்டம் வீராணம்  நோக்கி சென்றது.

சோழர்கள் வரலாறு குறித்து அறிந்து கொள்ள 300 கி.மீ., விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
இதுகுறித்து சைக்கிளிங் யோகிஷ் குழுவை சேர்ந்த ராமானுஜம் கூறியதாவது: நாங்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய சின்னங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு தஞ்சையில் எங்களது பயணத்தை தொடங்கி உள்ளோம். 3 நாட்களில் 300 கி.மீ. தூரம் பயணம் செய்ய உள்ளோம். இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் டிரேயில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் எங்களது விழிப்புணர்வு சைக்கிள் பயணம் அமைந்துள்ளது. முதல் நாளான தஞ்சையில் இருந்து வீராணத்துக்கு செல்கிறோம். அங்கு பொன்னியின் செல்வன் தடம் பதித்த இடங்களை பார்த்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். கார், மோட்டார் சைக்கிள், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று பாரம்பரிய சின்னங்களை பார்ப்பதை விட சைக்கிளில் சென்று பார்க்கும் போது பாரம்பரிய சின்னங்களுடன் நமக்குள்ள ஈர்ப்பு அதிகமாகும்.

சைக்கிளில் செல்லும் போது சுற்றுச் சூழலுக்கும் கேடு கிடையாது. உடலுக்கும் ஆரோக்கியம். முதல் நாளாக வீராணத்துக்கு செல்கிறோம். 2-ம் நாளாக பயணமாக நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு செல்ல உள்ளோம். 3-ம் நாள் தஞ்சை மாவட்டம் திருவையாறு, திங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்கிறோம். இந்த மூன்று நாள் பயணத்தில் பல்வேறு பாரம்பரிய இடங்களை பார்த்து மற்றவர்களுக்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

சோழர்கள் வரலாறு குறித்து அறிந்து கொள்ள 300 கி.மீ., விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

சோழர்கள் வாழ்ந்த இடங்கள் குறித்தும் தெரியப்படுத்துகிறோம். எங்களது சுற்று பயணத்துக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை மிகவும் உறுதுணையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நம் பாரம்பரிய இடங்கள் குறித்து மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடத்துபவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget