மேலும் அறிய

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே இன்று  5.5 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், 1.5 டன் எடையுடன் கூடிய மூன்று வயது திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் புதுப்பட்டினம் பகுதி வன காவலர் செல்லையா தலைமையில் வனத்துறை ஊழியர்கள்,  கடலோர காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கரை ஒதுங்கி இருந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டு, திமிங்கிலம் படகில் அடிபட்டு இறந்ததா? அல்லது மீனவர்கள் வலையில் சிக்கி இழந்துள்ளதா? அல்லது பிளாஸ்டிக் நெகிழி உள்ளிட்ட பொருட்களை விழுங்கியுள்ளாதா? என இறந்ததற்கான காரணம் குறித்து   விசாரணை மேற்கொண்டனர்.

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மாதானம் கால்நடை துறை மருத்துவர் மணிமொழி கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து இறந்த திமிங்கிலத்தை வாகனத்தில் ஏற்றிச் சென்று புதுப்பட்டினம் வனத்துறையினரின் சொந்தமான காட்டில் புதைத்தனர்.

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

மேலும் திமிங்கிலம் பற்றி சிறு தகவல்களை காண்போம், உலகின் மிகப்பெரிய உயிரினம் திமிங்கலம். நன்கு வளர்ந்த நீலத்திமிங்கலம் கிட்டத்தட்ட 100 அடி நீளமும், சுமார் 200 டன் எடையும் கொண்ட ஒரு பிரமாண்டமான உயிரினம். ஒரு திமிங்கலத்தின் எடை சுமார் 30 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமானது. இவ்வளவு பிரம்மாண்டமாக திமிங்கலங்கள் எப்படி வளர்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. திமிங்கலங்களின் பிரம்மாண்ட வளர்ச்சி குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கலங்கள் வெறும் 15 அடிகளே இருந்துள்ளன. அதன் புதை படிம எலும்புகளை நாம் கைகளாலேயே தூக்கி விடலாம்.

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்...!

பரிணாம வளர்ச்சியில் ஹோமோசேபியன் முதல் இன்றைய நவீன மனிதன் வரை மனித இனத்தில் உடலமைப்பிலோ, மூளை செயல்பாடுகளிலோ பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. மனிதன் வாழும் இடம், இடத்தின் சீதோஷன நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 3 மனித இனங்கள் வாழ்கிறோம். நிறம், உடல் அமைப்பு, உடல் அளவு ஆகியவை மட்டுமே வித்தியாசம். மற்றபடி மனிதன் மனிதன் தான். உலகின் பெரும்பாலான உயிரிங்கள் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிட்ட காலமாக மாற்றங்கள் இல்லாமல் உள்ளன. ஆனால் திமிங்கலங்கள் மட்டும் எப்படி இவ்வளவு பெரிதாக வளர்கிறது என்பதே ஆய்வாளர்களின் கேள்வியாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தற்போது உள்ள திமிங்கலம் தான் பூமி உருவான காலத்திலிருந்து வாழ்ந்து வரும் உயிரினங்களில் மிகப்பெரியது. இவை பிரம்மாண்ட டைனோசர்களை விடவும் பெரியது. நாம் உண்மையாகவே பிரம்மாண்ட உயிரினம் வாழும் காலத்தில் வாழ்கிறோம். எப்படி திமிங்கலங்கள் பிரம்மாண்டமான வளர்கின்றன: திமிங்கலங்களின் உணவுச் சங்கிலியில் ஏற்பட்ட மாற்றமே அவைகளின் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி 15 அடி நீளத்திலிருந்து 100 அடி நீளம் வரை வளரக்காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 4.5 மில்லியன் ஆண்டுகளிலிருந்து சில நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை கிடைத்த படிமங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கால இடைவெளியில் தான் உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது இருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்ட திமிங்கலம் வளர்ச்சியடைந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai NTK Murder: சீமான் அதிர்ச்சி..! மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகிலேயே, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
Madurai NTK Murder: சீமான் அதிர்ச்சி..! மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகிலேயே, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்Savukku Shankar :  ”தேச விரோதியா சவுக்கு?” அரசுக்கு சரமாரி கேள்வி! நீதிமன்றம் அதிரடிRajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!Puri Jagannath temple Ratna Bhandar : பொக்கிஷ அறை திறப்பு! கொட்டிக் கிடக்கும் தங்கம்! மர்மம் விலகுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai NTK Murder: சீமான் அதிர்ச்சி..! மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகிலேயே, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
Madurai NTK Murder: சீமான் அதிர்ச்சி..! மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகிலேயே, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் துப்பாக்கிச் சண்டை - ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம்
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Breaking News LIVE, JULY 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
CM Stalin: காவிரி விவகாரம் - இன்று கூடுகிறது தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் - எடுக்கப்போகும் முடிவு என்ன?
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Donald Trump: இனிதான் ஆட்டமே..! அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் - வெளியான முதல் அறிவிப்பு
இனிதான் ஆட்டமே..! அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் - வெளியான முதல் அறிவிப்பு
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!
Rasipalan: தனுசுக்கு வரவு, மகரத்துக்கு முயற்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: தனுசுக்கு வரவு, மகரத்துக்கு முயற்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Embed widget