மேலும் அறிய

3517 கோடியில் தயாராகும் தஞ்சை-விக்கிரவாண்டி சாலை - பணிகள் நடக்கும் போதே உள்வாங்கியது

வல்லுநர் குழு அமைத்து 165 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளின் தரத்தை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை

தஞ்சை-கும்பகோணம்-விக்ரவாண்டி வரை சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஒரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட நேரம் பயணமாகும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி முதல் தஞ்சை வரையிலான 165 கிலோ மீட்டர் நீளமுள்ள  தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ்,நான்கு வழிச்சாலையாக கடந்த 2006 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 2010 ஆம் ஆண்டில் திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி  தஞ்சாவூர் சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் அமைக்க 1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டு,  விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு 3,517 கோடியை கூடுதலாக ஒதுக்கியது. பின்னர் கடந்த 2018 ஏப்ரல் மாதங்களுக்கு முன்பு தொடங்கிய சாலை பணி மூன்று பகுதிகளாக பிரித்து  தொடங்கப்பட்டுள்ளன.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், தனியார் ஒப்பந்தத்தின் மூலம் விக்ரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை முதல் கட்டமாகவும், சேத்தியாத்தோப்பு முதல் சோழபுரம் வரை இரண்டாம் கட்டமாகவும், சோழபுரத்தில் இருந்து தஞ்சை வரை மூன்று கட்டமாக பணிகளை ஒதுக்கியது.


3517 கோடியில் தயாராகும் தஞ்சை-விக்கிரவாண்டி சாலை - பணிகள் நடக்கும் போதே உள்வாங்கியது

இதில் முதல் கட்டமாக விக்ரவாண்டி சேத்தியாத்தோப்பு வரை 711 கோடி மதிப்பீட்டில் 66 கி.மீ. நீளத்தில் சாலை அமைக்கப்படுகிறது. இதில் கெடிலம், தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் மேல் 26 ஆற்றுப்பாலங்களும், 27 சாலை மேம்பாலங்களும், 3 ரயில்வே மேம்பாலங்களும், 2 கனரக வாகன நிறுத்துமிடங்களும், பண்ருட்டி, வடலூர் ஆகிய பகுதிகளில் 2 புறவழிச்சாலைகளும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன. இரண்டாம் பகுதியான சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் தாராசுரம் வரை 1,461 கோடியில் 50.275 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பின்னலூர் சேத்தியாதோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள் என 16 கி.மீ. நீளத்துக்கு புறவழிச்சாலைகளும்,  100 கோடியில் அணைக்கரை பாலம் உள்பட 34 ஆற்றுப்பாலங்களும், ஜெயங்கொண்டம் கூட்ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி, சோழகத்தரம் உள்ளிட்ட பகுதிகளில் 23 மேம்பாலங்களும்,  ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.மூன்றாம் பகுதியான தாராசுரம் முதல் தஞ்சை மாரியம்மன் கோயில் புளியம்தோப்பு வரை 1,345 கோடி மதிப்பீட்டில் 48 கி.மீ. நிளத்தில் அமைக்கப்படுகிறது. இதில் கும்பகோணத்தில் உள்ள காவிரி  ஆறு, வடவாறு ஆகிய ஆறுகள் உள்பட 62 இடங்களில் ஆற்றுப்பாலங்களும், தாராசுரம் பகுதியில் ஒரு ரயில்வே மேம்பாலமும், வளையப்பேட்டை, ராஜகிரி, திருக்கருகாவூர் ஆகிய பகுதிகள் உள்பட 20 இடங்களில் சாலை மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.



3517 கோடியில் தயாராகும் தஞ்சை-விக்கிரவாண்டி சாலை - பணிகள் நடக்கும் போதே உள்வாங்கியது

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டை அருகே செல்லும் நான்கு வழிச்சாலையில் தொடர் மழை காரணமாக, திடீரென சுமார் ஒரு அடிக்கு மேல் உள்வாங்கியுள்ளது.  இதனால் சாலையின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சுமார் 3,500 கோடி ரூபாயில் போடப்பட்ட சாலையில், இதுவரை ஒரு இரு சக்கர வாகனம் கூட செல்லாத நிலையில், உள்வாங்கி இருப்பது என்பது அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. வாகனங்கள் செல்லாத போதே சாலை உள்வாங்குகிறது. பயன்பாட்டிற்கு வந்த பிறகு வாகனங்கள் வேகமாக செல்லும்போது,  சாலைகள் உள்வாங்கினால் மிகப் பெரிய விபத்துக்கள் ஏற்படும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் சாலையின் நடுவே இருந்த பள்ளத்தால், அரசு பேருந்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சாலைகள்  பயன்பாட்டிற்கு வந்து, மிகப் பெரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு சாலை தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்,  மேலும்  சாலைகளில் தற்காலிக தீர்வு ஏற்படுத்தாமல், நிரத்தர தீர்வுக்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும் வல்லுநர் குழு அமைத்து 165 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளின் தரத்தை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும், ஒருவேளை சாலை தரமற்றதாக இருந்தால் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget