மேலும் அறிய

150 கிலோ எடையில் தயாராகும் முப்படை தளபதி பிபின் ராவத் சிலை - நாடு முழுவதும் எடுத்து செல்ல திட்டம்

இளைஞர்களும் முப்படைகளில் சேர்ந்து நாட்டுக்காக பாடுபட வேண்டும் என நோக்கத்தோடு நாட்டுக்காக உயிர் நீத்த பிபின் ராவத்தின் சிலையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல முடிவு

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி டெல்லியில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்துக்குச் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அங்கிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருக்கும் வெலிங்கடன் ராணுவ பயிற்சிப் பள்ளியில் நிகழ்வில், ராணுவ அகாடமியில் பயிற்சி பெறும் அலுவலர்களிடையே உரை நிகழ்த்துவதற்காக  கலந்துகொள்வதற்காக புறப்பட்டார். இலக்கை அடைய 10 நிமிடம் இருந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் மற்றும் 11 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் துரதிர்ஷ்டமாக விபத்தில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தார்கள். இந்த ஹெலிகாப்டரில் பயணித்த கேப்டன் வருண் சிங் படுகாயங்களோடு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார், பின்னர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.  ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 12 பேர் பலியானார்கள்.

150 கிலோ எடையில் தயாராகும் முப்படை தளபதி பிபின் ராவத் சிலை - நாடு முழுவதும் எடுத்து செல்ல திட்டம்

முப்படை தளபதி பிபின்ராவத், இவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இறந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடலுார் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர் சோசியல் வெல்பவர் பவுண்டேசன் சார்பில், மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு ஐம்பொன்னாலான சிலையை தயாரிக்க முடிவு செய்தனர். அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலுள்ள சிற்ப கூடத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பில் தயாரிக்க முடிவு செய்து, அதற்கான முதல் கட்டமாக, தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகிய 5 உலோகங்களை கொண்ட ஐம்பொன்னாலான சிலையை வார்ப்பு எடுப்பதற்காக அவரது உருவம் தத்ரூபமாக தயார் செய்யும் பணியில் ஸ்தபதிகள் ஈடுபட்டு  வருகின்றனர்.

150 கிலோ எடையில் தயாராகும் முப்படை தளபதி பிபின் ராவத் சிலை - நாடு முழுவதும் எடுத்து செல்ல திட்டம்

இந்நிலையில், களிமண்ணால் செய்யப்பட்ட பிபின்ராவத்,சிலையை   கடலுார் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர் சோசியல் வெல்பவர் பவுண்டேசன் தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், சுரேஷ்கண்ணா, ஆனந்தன், இளையராஜா, சீமன், ரங்காசேட் ஆகியோர் பார்வையிட்டு, சிலைகளை செய்ய வேண்டிய மாற்றங்களை தெரிவித்தனர்.

150 கிலோ எடையில் தயாராகும் முப்படை தளபதி பிபின் ராவத் சிலை - நாடு முழுவதும் எடுத்து செல்ல திட்டம்

பின்னர் தலைவர் பாபு நிருபர்களிடம் கூறுகையில்,தமிழகத்திற்கு வரும் போது முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ உயரதிகாரிகளின் வீரமரணம் அடைந்தது முன்னாள் ராணுவத்தினரான எங்களை சோக்ததை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிபின்ராவத்திற்கு ஐம்பொன்னாலான சிலையை வைக்க முடிவு செய்து, கும்பகோணத்திலுள்ள சிற்ப கூடத்தில் தயாரிக்க முடிவு செய்தோம். சுமார் 150 கிலோ எடை கொண்ட மார்பளவில் தயாரிக்கும் பிபின் ராவத்தின் ஐம்பொன்னாலான சிலை, தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இறுதி வடிவம் பெறும் அச்சிலையில் உள்ள நிறை குறைகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளோம்.

150 கிலோ எடையில் தயாராகும் முப்படை தளபதி பிபின் ராவத் சிலை - நாடு முழுவதும் எடுத்து செல்ல திட்டம்

ஐம்பொன்னால்  தயாரிக்கப்பட்டு வரும் இச்சிலை பணிகள் வரும் 20 நாட்களுக்குள்  முடிவடைந்து விடும். உலகத்தின் மையப்பகுதியான சிதம்பரம் நடராஜர் கோயிலிருந்து, இச்சிலை புறப்பட்டு, இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலுள்ள ராணுவ தலைமையகத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்திய பின், பிரதமர் மோடியிடம் இச்சிலையை ஒப்படைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அச்சிலையை டெல்லியிலுள்ள போர் நினைவு சின்னம் பகுதியில் வைக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.

150 கிலோ எடையில் தயாராகும் முப்படை தளபதி பிபின் ராவத் சிலை - நாடு முழுவதும் எடுத்து செல்ல திட்டம்

இச்சிலையை முழுவதும் ஐம்பொன்னால் தயாரிக்கப்பட்டு எடுத்து செல்வதற்கு முன்பு அவரது கண்களை திறப்பதற்காக, பிபின் ராவத்தின் குடும்பத்திலுள்ளவர்களுக்கு, கண்களை திறக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம். இளைஞர்களுக்கு தேசப்பற்று, நாட்டுப்பற்று தாய் நாட்டை காக்க வேண்டும் என குறிக்கோள் வரவேண்டும், அனைத்து இளைஞர்களும் முப்படைகளில் சேர்ந்து நாட்டுக்காக பாடுபட வேண்டும் என நோக்கத்தோடு நாட்டுக்காக உயிர் நீத்த பிபின் ராவத்தின் சிலையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget