மேலும் அறிய

144 தடை உத்தரவு; மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு..!

நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாய கூலித் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  நேரடி நெல் விதைப்பு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதால் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27 ம் தேதி நேரடி நெல் விதைப்பு செய்த வயலில் இறங்கி வயலை சேதப்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதனை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜை ஒரு சிலர் தாக்க முயன்றனர்.

144 தடை உத்தரவு; மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன்  நேரடி நெல் விதைப்பு..!

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று 38 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அன்றைய தினமே இந்த கைது சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

144 தடை உத்தரவு; மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன்  நேரடி நெல் விதைப்பு..!

இந்நிலையில், பருத்திக்குடி கிராமத்தில் 7 விவசாயிகள் இன்று தங்களுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.  இந்த சூழலில் கடந்த 27 ம் தேதி நேரடி நெல்விதைப்பு செய்தபோது சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாலும், போராட்டக்காரர்களும் விவசாயிகளும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், இருதரப்பினர் இடையே கோயில் கும்பாபிஷேக விழாவில் தகராறு ஏற்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி கூலி உயர்வு பிரச்சினையும் இருந்து வருகிறது. இதனால்  மேலும் பிரச்சினை ஏற்படாதவாறு காவல்துறையினர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகாவிற்கு அறிக்கை அளித்து தடையாணை உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தனர். 

144 தடை உத்தரவு; மயிலாடுதுறையில் போலீஸ் பாதுகாப்புடன்  நேரடி நெல் விதைப்பு..!

காவல்துறை அறிக்கையின் பேரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144(3) ன்படி மேலபருத்திக்குடி மற்றும் கீழப்பருத்திக்குடி, காலனித்தெரு உள்ளிட்ட ஒரு கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 144 (3) தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இன்று காலை 10 மணிக்கு நேரடி நெல் விதிப்பு தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  தங்கவேல் தலைமையில் மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் மற்றும் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு நேரடி நெல் விதைப்பு நடைபெற்றது. இதன்காரணமாக அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Embed widget