மேலும் அறிய
தமிழகத்தில் இதுவரை பிடிபட்டது ரூ.412 கோடி
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடந்த பல்வேறு தேடுதல் வேட்டையில் இதுவரை ரூ.412 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

money_seized
தமிழகத்தில் ஏப்ரல் 6ல் வாக்குபதிவு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மாவட்ட வாரியாக பறக்கும் படை கண்காணிப்பு செய்யப்பட்டது. அதன் படி 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பணம் வைத்திருந்தவர்கள், அனுமதியின்றி நகை மற்றும் பொருட்கள் கொண்டு சென்றவர்கள் மடக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை நடந்த தேடுதல் வேட்டையில் ரூ.412 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்தியபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















