சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்

சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாசுத் தயாரிப்புக்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசி உலகப்புகழ் பெற்றதாகும். இருப்பினும், இந்த பகுதியில் பட்டாசுத் தயாரிப்பின்போது வெடிவிபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி அருகே உள்ள எம்.துரைசாமிபுரத்தில் பட்டாசு தயாரிப்பு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் சுமார் 20 பேர் வேலை செய்து வந்தனர். அப்போது, அந்த ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்து காரணமாக அந்த ஆலையில் வேலை செய்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் வெடிமருந்துகள் இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும், ஆலையின் உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags: death accident sivakasi injuries fire works crackers

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

சென்னையில் கொரோனா பாதிப்பு எங்கு அதிகம்?

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கன்னியாகுமரியில் தபால் வாக்குப்பதிவு முறைகேடு - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்..

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

கோவில்களில் நடைபெறும் திருமணங்களுக்கு புதிய விதி.. தமிழக அரசின் புதிய உத்தரவு என்ன?

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

’தமிழக மக்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும்’ - முதல்வர் பழனிசாமி வாழ்த்து.

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி: வனத்துறை வினோத விளக்கம்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் 16 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

”ஆதாரமில்லாம பேசக்கூடாது” - நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

”ஆதாரமில்லாம பேசக்கூடாது” - நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

School Opening Demand: ‛ஸ்கூலை திறங்க...’ சீருடையில் பள்ளி முன் அடம் பிடித்த சிறுவன்!

“ரகிட ரகிட” பாடல் எங்கே ஷூட் செய்யப்பட்டது தெரியுமா ? மனம்திறந்த சந்தோஷ் நாராயணன்!

“ரகிட ரகிட” பாடல் எங்கே ஷூட் செய்யப்பட்டது தெரியுமா ? மனம்திறந்த சந்தோஷ் நாராயணன்!