(Source: ECI/ABP News/ABP Majha)
ரஜினி உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்- முதல்வர் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்தின் கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமே தாதாசாகேப் பால்கே விருது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு திரைத்துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்தது. இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்ளும், திரைப்பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்.

திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது.

தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 1, 2021

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பாராட்டியுள்ளார்.