![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Youtuber TTF Vasan: நோட்டட் லிஸ்ட்டில் யூ ட்யூபர் டிடிஎஃப் வாசன்.. செக்வைத்த சென்னை போலீஸ்..
மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் சென்ற யூட்டூபர் டிடிஎஃப் வாசன் நோட்டட் லிஸ்ட்டில் உள்ளார் ; டிவிட்டரில் எழுப்பப்பட்ட புகாரினால் செக் வைத்திருக்கிறது சென்னை போலீஸ்.
![Youtuber TTF Vasan: நோட்டட் லிஸ்ட்டில் யூ ட்யூபர் டிடிஎஃப் வாசன்.. செக்வைத்த சென்னை போலீஸ்.. Youtuber TTF Vasan Noted List Chennai Police Riding Bike at Speed 243 kmph viral on social media Youtuber TTF Vasan: நோட்டட் லிஸ்ட்டில் யூ ட்யூபர் டிடிஎஃப் வாசன்.. செக்வைத்த சென்னை போலீஸ்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/04/ba4f080c880c721822767d593ca36f681656937997_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் சென்ற யூட்டூபர் டிடிஎஃப் வாசன் நோட்டேட் லிஸ்ட்டில் உள்ளார் ; டிவிட்டரில் எழுப்பப்பட்ட புகாரினால் செக் வைத்திருக்கிறது சென்னை போலிஸ்.
இன்றைய தொழில்நுட்ப காலத்தில் மிகச் சாதாரண எளிய மனிதர்களும் சமூக வலைதளங்களினால் பிரபலமடைந்து வருகின்றனர். அவ்வகையில் பிரபலமடைந்த பலரில் ஒருவர் தான் டி.டி.எஃப். வாசன். தமிழ்நாட்டின் கோவையை மைய்யமாகக் கொண்ட டிடிஎஃப் வாசன் முதன் முதலில் டுவின் தொட்டலர்ஸ் எனும் யூட்டூப் சேனலை 2020ல் தொடங்கினார். அப்போது அவருக்கு இருந்த சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 200-க்கும் குறைவு தான். பின்னர் தனது யூட்டூப் சேனலினை மேம்படுத்த தனது பயண வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதுவும் தான் பைக்கில் பயணித்து வீடியோக்களை பதிவிட்டு வந்ததால் பெரும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக இதற்கு 20k கிட்ஸ் முதல் பைக்கில் உலகினைச் சுற்ற ஆசையோடு இருக்கும் அனைவரிடத்திலும் பெரும் ஆதரவு கிடைத்தது.
இதனால் அடுத்த ஒரு சில மாதங்களில் இவரது யூட்டூப் சேனலின் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 20 லட்சங்களைக் கடந்தது. பெரும் வரவேற்பைப் பெற்ற இவரது வீடியோக்களால் இவரது யூட்டூப் சேனலினை 2.74 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
Riding bike in 240+km/hr speed and posting in YouTube.. If you don't take action, it will encourage others to do the same.@tnpoliceoffl @ChennaiTraffic @chennaipolice_ pic.twitter.com/CmqzYygiPQ
— Poovai Shakeer Khan (@shakeerADMK) July 4, 2022
It is noted.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) July 4, 2022
அவரது சப்ஸ்கிரைபர்களில் பலர் தற்போது அவரது ரசிகர்களாகவும் மாறியுள்ளனர். கடந்த வாரத்தில் டிடிஎஃப் வாசனுக்கு பிறந்த நாள் என்பதால் கோவை தனியார் விடுதியில் தனது ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினர். இவருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளம் உருவாக முக்கிய காரணமே அவரது பைக் ஸ்டண்டுகள்தான். அப்படி இருக்க இவரது பை ஸ்டண்டுகளைப் பார்த்து மற்ற இளைஞர்கள் மற்றும் சிறுவர்களும் முயற்சி செய்து விபத்துக்கு உள்ளாக வாய்ப்பிருப்பதாக டிவிட்டரில் ஒருவர், மாநகர சென்னை காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநகர் அசென்னை காவல் துறையின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் கவனத்தில் கொள்ளப்படுகிறது எனவும் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த புகாரில், டிடிஎஃப் வாசன் பைக்கில் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதை தனது யூட்டூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனை மேற்கோள் காட்டி புகார் எழுப்பப்பட்டுள்ளதால், டிடிஎஃப் வாசன் தற்போது நோட்டேட் லிஸ்ட்டில் உள்ளார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)