மேலும் அறிய

Yercaud Bus Accident: ஏற்காடு: தனியார் பேருந்து கோர விபத்து - பேருந்து டிரைவரின் லைசன்ஸ் ஐந்து ஆண்டுகள் ரத்து!

விசாரணையில் ஓட்டுனரின் கவன குறைவால் மட்டுமே பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தனியார் பேருந்து எழுவது பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டது. இந்த பேருந்தை சேலத்தைச் சேர்ந்த மணி என்பவர் இயக்கி வந்தார்.

விபத்து:

ஏற்காட்டில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து மாலை 5:40 மணிக்கு மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 13 வது கொண்டை ஊசி வளைவில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பனிரெண்டாவது கொண்டை ஊசி வளைவு தாண்டி, பதினோராவது கொண்டை ஊசி வளைவின் அருகில் விபத்துக்குள்ளானது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Yercaud Bus Accident: ஏற்காடு: தனியார் பேருந்து கோர விபத்து - பேருந்து டிரைவரின் லைசன்ஸ் ஐந்து ஆண்டுகள் ரத்து!

6 பேர் பலி:

இந்த விபத்தில் முனீஸ்வரன் என்ற 11 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிக காயங்களுடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சந்தோஷ் பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், பேருந்தில் பயணித்து விபத்துக்குள்ளான 65 பேர் உடனடியாக மலைப்பாதையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் கார், வேன்கள் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். காயமடைந்தவர்கள் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர். 

Yercaud Bus Accident: ஏற்காடு: தனியார் பேருந்து கோர விபத்து - பேருந்து டிரைவரின் லைசன்ஸ் ஐந்து ஆண்டுகள் ரத்து!

விபத்திற்கான காரணம்:

அதிக அளவிலான பயணிகளை ஏற்றியதாலும், அதிவேகத்தில் இயக்கப்பட்டதாலும் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக கூறப்பட்டது. குறிப்பாக மலைப்பாதைகளில் செல்லும் பேருந்துகளில் பாதுகாப்பிற்காக ஒரு கதவுகள் மட்டுமே இருக்கும். மேலும், சாதாரண பேருந்தை விட மலைகளில் செல்லும் பேருந்துகளில் சீட் குறைவாகவே இருப்பது வழக்கம். இதேபோன்று மலைப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகளில் நின்று கொண்டு பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்க கூடாது என பல்வேறு விதிமுறைகள் இருந்தும், அதிக அளவிலான பயணிகளை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக வளைவில் வந்ததால் ஸ்டேரிங் ராடு உடைந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டது. ஆனால் விசாரணையில் ஓட்டுனரின் கவன குறைவால் மட்டுமே பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான விசாரணை நடைபெற்று வந்து நிலையில் தற்போது ஓட்டுநர் மணியின் கவனக்குறைவு காரணமாக பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் பேருந்து ஓட்டுனர் மணியின் ஓட்டுனர் உரிமம் ஐந்து ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget