மேலும் அறிய

Kalaignar Urimai Thogai: ஓய்வூதியம் பெறும் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - முதலமைச்சர் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

​ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்:

​கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நடத்தினார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு  கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விண்ணப்பப் பதிவு முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார். ​கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு தகுதிகள் மற்றும் தகுதியின்மைகளை வரையறை செய்து ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற யார் தகுதியானவர்கள்:

இதில், கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள்  விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் கீழ் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும், இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை, பரிசீலித்த முதலமைச்சர், வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம்,  ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம், இலங்கை அகதிகளுக்கான (முதியோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்) ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு முதியோர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூபாய் 1200-ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டது.

ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்ததால், அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இயலாது என்று திட்ட விதி வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார். முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த அரசு முதியோர் ஓய்வூதியத்தை வழங்குகிறது. முதியோரைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பத்தின் கடமை மட்டுமல்ல, சமூகத்தின் கடமை என்றும் அரசு கருதுகிறது.

அதேவேளையில் அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பலன் பெறுவது தடைபடக்கூடாது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். எனவே,  இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள‌ பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.  இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget