மேலும் அறிய

குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்

திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் அத்தகைய குற்றங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்வது கவலையளிக்கிறது.- அன்புமணி.

புதுக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமக்கு நேர்ந்த அவலத்தை நேரடியாக வெளிப்படுத்துவதற்கு கூட முடியாத நிலையில் உள்ள இளம்பெண்ணை மனித மிருகங்கள் சீரழித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

கறம்பக்குடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பணியாற்றி வரும் அந்தப் பெண், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அங்கு மகிழுந்தில் வந்த கும்பல் அவரை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் தள்ளிவிட்டு சென்றிருக்கிறது.

கஞ்சா கும்பல் அட்டூழியம்

அதேபோல், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில்  கஞ்சா வணிகம் குறித்து செய்தி வெளியிட்டதால், ஆத்திரமடைந்த கஞ்சா வணிகக் கும்பல் ஒன்று, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் காஜா முகைதீன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த செய்தியாளர் தஞ்சாவூர் மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பெருந்தீமைகளில் குறிப்பிடத்தக்கது கஞ்சா வணிகமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்தது ஆகும். திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் அத்தகைய குற்றங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்வது கவலையளிக்கிறது.

தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். திமுக அரசில் ஏற்பட்ட தீமைகளை ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான ஆர்வம் காட்டுவதற்கு இந்த நிகழ்வுகள் சான்றாகும்.

புதுக்கோட்டை அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்விலும், கஞ்சா வணிகக் கும்பலால் செய்தியாளர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்விலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பேரப் பிள்ளைகளுக்கு போட்டு காட்டுவாரா சேகர்பாபு ? - பருவமழை ஆய்வில் வெடித்த அரசியல் புயல்
பேரப் பிள்ளைகளுக்கு போட்டு காட்டுவாரா சேகர்பாபு ? - பருவமழை ஆய்வில் வெடித்த அரசியல் புயல்
"முதல்ல கவுன்சிலர் ஆகட்டும்" சீமானை விழி பிதுங்க வைத்த அமைச்சர் ரமேஷின் சாட்டையடி பதில்
தவணை முறையில் காலி மனை ( Plot in Installment ) ; பத்திரப் பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
தவணை முறையில் காலி மனை ( Plot in Installment ) ; பத்திரப் பதிவு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Putin Warns Europe: பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
Xi Jinping on Middle East War: “மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
“மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Embed widget